மேலும் அறிய

Muthukaalai: “மதுபானம் பத்தி ஆராய்ச்சி பண்ண போறேன்.. 2 பேரையாவது மீட்கணும்..” 3 டிகிரி வாங்கிய முத்துக்காளை உருக்கம்!

Actor Muthukaalai: குடியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதுதொடர்பாக படிக்க வாய்ப்பு கிடைத்தால் என்னால் முடிந்தவரை ஒரு 2 பேரையாவது குடியில் இருந்து மீட்டுக் கொண்டு காப்பாற்றுவேன்.

பிரபல காமெடி நடிகர் முத்துகாளை படித்து முடித்து தன் மூன்றாவது பட்டத்தை வாங்கியுள்ளதுதான் தற்போதைய கோலிவுட் ஹாட் டாப்பிக். 1997ஆம் ஆண்டு நடிகர் பிரபுவுடன் ‘பொன்மனம்’ எனும் படத்தின் மூலம் அறிமுகமான முத்துக்காளை (Muthukaalai),  நடிகர் வடிவேலுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தன் காமெடியால் கவனமீர்த்தார்.

ஆனால் இடையே இவருக்கு தீவிர குடிப்பழக்கம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாகியிருந்த நிலையில், சமீபத்தில் முத்துக்காளை படிப்பில் ஆர்வம் காண்பித்து குறுகிய காலத்தில் மூன்று பட்டங்கள் பெற்றுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தன்னை படிக்கத் தூண்டிய விஷயம், மது பழக்கத்தை கைவிட்டது ஆகியவை பற்றி பேசி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் முத்துக்காளை.

"கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இன்னைக்கு வரைக்கும் பார்த்தால் நான் ஏதோ ஒயின்ஷாப் வாசலில் படுத்துகிடக்குற மாதிரியே நிறைய மீடியாவில் செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. நான் குடியை நிறுத்தி கிட்டதட்ட 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் எல்லா சேனலிலும் முத்துக்காளை ஒரு குடிகாரன் என சொன்னார்கள் அதனை மாற்றி காட்ட வேண்டும் என நினைத்தேன்.

அப்ப என்னை திரும்பிப் பார்க்க ஏதாவது வித்தியாசமா பண்ண வேண்டும் என முடிவு செய்தேன். இப்ப முத்துக்காளை 3 டிகிரி வாங்கி முயற்சி செய்துள்ளேன். நீங்களும் முயற்சித்தால் முடியும். இதுக்குமேல் என்ன படிக்கலாம் என்றால் மதுபானம் பற்றி சின்னதாக ஆராய்ச்சி பண்ணலாம் என இருக்கிறேன்.

ஆல்கஹால் எதனால் குடிக்க வேண்டும் என நினைக்கிறோம். அதற்கான காரணம்? குடித்த பிறகு என்ன மாதிரியான வேலை செய்கிறது? என்பது தொடர்பாக ஆராய்ச்சி பண்ண போகிறேன். காரணம் குடியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதுதொடர்பாக படிக்க வாய்ப்பு கிடைத்தால் என்னால் முடிந்தவரை ஒரு 2 பேரையாவது குடியில் இருந்து மீட்டுக் கொண்டு காப்பாற்றுவேன். அடுத்த படிப்பு அதனை நோக்கி தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இளமையில் எதையெல்லாம் இழந்தோமோ அதையெல்லாம் மீட்டெடுக்க ஆசைப்பட்டேன். நான் படிக்கிறதைப் பார்த்து கிண்டல் பண்ணாங்க. இந்த வயதில் படிச்சி என்ன பண்ணப் போறாருனு கேட்டாங்க. நான் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை வரலாறு, தமிழ், தமிழ் இலக்கியம் ஆகிய 3 பிரிவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் கோடிக்கணக்கான சொத்து சேர்த்திருந்தாலும் சந்தோசப்பட்டிருக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Entertainment Headlines: அயலான் ப்ரீ ரிலீஸ் விழா.. வைரலாகும் விஷால் வீடியோ.. கீர்த்தியின் கோபம்.. சினிமா ரவுண்ட்-அப் இன்று! 

Bigg Boss Poornima: பிக்பாஸ் செஞ்ச தப்பு.. நான் டைட்டில் வின் பண்ணக்கூடாதுனு நினைக்கறாரு.. புட்டு புட்டு வைத்த பூர்ணிமா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget