மேலும் அறிய

Entertainment Headlines: அயலான் ப்ரீ ரிலீஸ் விழா.. வைரலாகும் விஷால் வீடியோ.. கீர்த்தியின் கோபம்.. சினிமா ரவுண்ட்-அப் இன்று!

Entertainment Headlines: திரையுலகில் இன்றைய அதாவது டிசம்பர் 26ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

“குடியில் இருந்து மீட்டது படிப்புதான்.. 50 வயதில்தான் ஆசைப்பட்ட கல்வி கிடைத்தது” - முத்துக்காளை உருக்கம்..

பிரபல காமெடி நடிகர் முத்துகாளை தான் படித்து 3 பட்டங்கள் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைவரும் கல்வியை தவறாமல் கற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  1997 ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடித்த பொன்மனம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் முத்துக்காளை. சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக வர வேண்டும் என நினைத்த அவரை காலம் நடிகராக மாற்றியது. நடிகர் வடிவேலுடன் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானார். மேலும் படிக்க

“என்னய்யா பாட்டு எழுதுறீங்க? - வேற தொழில் பண்ணலாம்” - பாடலாசிரியர்களை கண்டித்த தமிழருவி மணியன்

படிக்காத பாமரனிடம் சென்று சேர்ந்து பாதிப்பை உண்டாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஊடகம் உலகத்தில் உண்டு என்றால் அது சினிமா மட்டும் தான் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.  பிரபலமான சித்த மருத்துவர் வீரபாபு, நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுளார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் ‘முடக்கருத்தான்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் படிக்க

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா லால் சலாம்?...காரணம் தெரியாமல் ரசிகர்கள் தவிப்பு

3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் லால் சலாம். விஷ்ணு விஷால் , விக்ராந்த், உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் படிக்க

வெளிநாட்டு பெண்ணுடன் டேட்டிங், முகத்தை மறைத்துக்கொண்டு ஓடிய விஷால்? வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் நடிகர் விஷால் (Vishal) வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 46 வயதாகும் நடிகர் விஷால் தொடர்ந்து சிங்கிளாக வலம் வருகிறார். செல்லமே படத்தில்  2004ஆம் ஆண்டு அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கோலோச்சி வருகிறார். மேலும் படிக்க

தீப்பற்றி எரிந்த மின்சார கார்.. சரமாரியாகத் திட்டி கீர்த்தி பாண்டியன் பதிவு!

கண்ணகி பட நடிகை கீர்த்தி பாண்டியன் (Keerthi Pandian) சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வைரலாகி வருகிறார். நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்ட கீர்த்தி பாண்டியன், சமூக வலைதளங்களில்  உருவக்கேலி செய்யப் பட்டார். தொடர்ந்து இதனை மிகவும் பக்குவமாக அணுகி தன்மீது வெறுப்பை காட்டிய நபர்களுக்கு பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் அவர் குறித்து சர்ச்சையாக பேசியதைத் தொடர்ந்து அவரை கடுமையாக சாடினார். மேலும் படிக்க

வர்மன் முதல் மலையரசி வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மலையாள சினிமாக்கள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்கு வரும் சுமாரான படங்களை மலையாள சினிமாவை ஒப்பிட்டு பேசும் வழக்கத்தை நாம் பார்க்கலாம். மலையாள சினிமாவிற்கு தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கும் வரவேற்பு மலையாள நடிகர்கள் தமிழில் அதிகம் நடிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த மலையாள நடிகர்களைப் பார்க்கலாம். மேலும் படிக்க

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget