PS1 latest update: ஆழ்வார்கடியாரின் குருவாக மோகன்ராம்... PS1 லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட ஜெயராம்
நடிகர் ஜெயராமின் குருவாக அனிருத்த பிரம்மராயர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் மோகன் ராம் என்பது தான் இன்றைய பொன்னியின் செல்வன் 1 லேட்டஸ்ட் அப்டேட்.
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டுள்ள காவிய திரைப்படம் " பொன்னியின் செல்வன் " இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி மிகவும் கோலாகலமாக உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மிகச்சிறந்த கூட்டணியின் படைப்பு :
இயக்குனர் மணிரத்னத்தின் பல ஆண்டுகள் கனவு இப்போது நிஜமாகி நம்மை மகிழ்விக்க உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளே நிலையில் படத்தின் விளம்பர பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். படம் குறித்த மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பதால் தினம் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டு வருகிறார்கள் படக்குழுவினர். அந்த வகையில் இன்றும் புதிதாக ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
#PonniyinSelvan BTS📸#ManiRatnam - #Jayaram(Nambi) pic.twitter.com/6epJOcoNyy
— Saloon Kada Shanmugam (@saloon_kada) July 10, 2022
வரலாற்றில் இடம் பிடிக்கும் PS1 :
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என ஏராளமான திறமையான நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். எப்படி இந்த நாவல் காலம் கடந்தும் தலைமுறையை கடந்தும் நிலைத்து நிற்கிறதோ அது போலவே இந்த திரைப்படமும் காலங்கள் கடந்தும் நிச்சயாக வரலாற்றில் பேசப்படும்.
#PonniyinSelvan #PS1 casting update@actormohanraman as Anirudha Brammarayar shared Officially by #Jayaram
— @ponniyinselvan_movie (@PS_FANS_CLUB) September 16, 2022
Can't wait for this
GURU - SHISHYAN combo 🔥💥 pic.twitter.com/fsXLhRZhTt
லேட்டஸ்ட் அப்டேட் :
இன்றைய புதிய அப்டேட்டின் படி நடிகர் ஜெயராம் ஆழ்வார்கடியன் நம்பி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் புதியதாக வந்திருக்கும் அப்டேட் என்னவென்றால் நடிகர் மோகன் ராமன், அனிருத்த பிரம்மராயர் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் என்பது தான். இவர் ஆழ்வார்கடியனின் நம்பியின் குரு கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த அதிகாரபூர்வமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயராம். இந்த அறிவிப்பினை வெளியிட்டு அதனுடன் அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயராம். ரசிகர்கள் அனைவரும் இந்த குரு - சிஷ்யன் காம்பினேஷனுக்காக மிகவும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்களின் இதய துடிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.