‛என்னை வெளியே காக்க வெச்சு அனுப்புறாங்க...’ - புறக்கணிப்பால் வெடிக்கும் 'மாஸ்டர்' மகேந்திரன்!
Master Mahendiren : ‛‛சினிமாவில் பெரிய ஆளா வந்துருவேன்னு நான் சொல்றப்ப எல்லாம், எல்லாரும் எனக்கு திமிரு அதிகம் இருக்குன்னு நினைக்குறாங்க. அது திமிரு இல்ல, என் மேல நான் வச்ச நம்பிக்கை...’’
மாஸ்டர் மகேந்திரன் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது நாட்டாமை படம் தான். அதில் ஆமா! அந்த அக்காவ அந்த மாமா தூக்கிட்டு போறத நான் பார்த்தேன் என்று மழலை மொழி மாறாமல் பேசி இருப்பார். அதனை தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா, இளைய திலகம் பிரபு என்று நடித்திராத பிரபலங்களே கிடையாது.
அதன் வளர்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பான மஸ்தானா..மஸ்தானா.. நிகழ்ச்சியில் மாஸ்டர் மகேந்திரன் கலந்துகொண்டு முதல் பரிசையும் தட்டி சென்றார். தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் எந்தவொரு படமும் இவருக்கு பெரிதாக கைகூடவில்லை.
இந்தநிலையில், கடந்த பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக மாஸ்டர் மகேந்திரன் நடித்து தான் யார் என்பதை இந்த தமிழ் திரையுலகிற்கு மீண்டும் நிரூபித்தார். இந்த சூழலில் தற்போது மாஸ்டர் மகேந்திரன் தான் இன்னும் படவாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டபடுவதாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் கொடுத்த அந்த பேட்டியில், "சினிமாவில் பெரிய ஆளா வந்துருவேன் நான் சொல்றப்ப எல்லாம், எல்லாரும் எனக்கு திமிரு அதிகம் இருக்குன்னு நினைக்குறாங்க. அது திமிரு இல்ல, என் மேல நான் வச்ச நம்பிக்கைன்னு ஏன் யாருக்கும் புரிய மாட்டிக்குது.
நிறைய பேர் நான் நல்லா நடிக்குறேன், நீ சீக்கிரம் பெரிய ஆளா வருவேன்னு சொல்றாங்க. ஆனா,அவங்க நினைச்சா எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைத்து தர முடியும். அந்த இடத்துல தான் அவங்களும் இருக்காங்க. அப்படி யாரும் பண்றது இல்லை. அவங்க உன்னால பண்ண முடியும்னு சொல்றாங்க, ஒரு வாய்ப்பு மட்டும் ஏன் அமைத்து தர மாட்டிக்குறாங்கனு தான் எனக்கு தெரியல.
சின்ன வயசுல என் படம் ஓடுன தியேட்டர் உரிமையாளர், தம்பி நீ சூப்பரா நடிக்குற அப்படி, இப்படின்னு என்கிட்ட சொன்னாரு. இப்ப என்ன வச்சு படம் எடுக்குற தயாரிப்பாளர்கிட்ட போய் என் பேர சொல்லி அவன வச்சு படம் பண்ணாதீங்க. அவனுக்கு மார்க்கெட் இல்லன்னு சொல்றாரு. அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.
அவங்களா வாய்ப்பு தரமாட்டாங்க, நம்மதான் வாய்ப்பு கேட்கனும்னு ஒரு தமிழ் இயக்குநர் வீட்டு வாசல் முன்னாடி காலையில இருந்து நின்னேன். மதியம் சாப்புட்டு வாங்கன்னு சொன்னாங்க, நானும் வீட்டுக்குபோய் சாப்டு நின்னேன். காலையில் இருந்து எங்க எப்படி இருந்தேனோ? அதே மாதிரி சாயங்காலம் 6 மணி வரை இருந்தேன்.
நான் நிக்குறது அவங்களுக்கு தெரியும். சிசிடிவி கேமரா வழியா என்ன பார்த்துட்டு தான் இருக்காங்க. சாயங்காலம் எதுவுமே தெரியாத மாதிரி மகேந்திரன் நல்ல நடிப்பான் அவன்கிட்ட போட்டோ வாங்கிட்டு அனுப்புங்க.. நல்ல கேரக்டர் வந்ததும் கூப்பிடலாம்ன்னு சொல்றாங்க.. இப்பத்தான் நான் நல்ல நடிப்பேனு அவங்களுக்கு தெரியுமா..? சின்ன வயசுல இருந்து என்ன பார்த்துட்டுதான் இருக்காங்க. ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியல.
என்னதான் நான் நல்ல நடிப்பேன்னு தெரிஞ்சும் வாய்ப்பு மட்டும் வரவே இல்ல” என்று மாஸ்டர் மகேந்திரன் மனம் உருகி பேட்டியளித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்