Manikandan: மணிகண்டன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம்.. என்னன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக தனது பணியை தொடங்கி தற்போது நடிகராக வளர்ந்து வருபவர் மணிகண்டன். நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வரும் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.
ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும், எனக்கு பிடித்த மாதிரியும் படங்கள் பண்ணுவது ரொம்ப பெரிய சந்தோசமாக உள்ளது என நடிகர் மணிகண்டன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக தனது பணியை தொடங்கி தற்போது நடிகராக வளர்ந்து வருபவர் மணிகண்டன். நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வரும் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனிடையே மணிகண்டன் நடித்த “லவ்வர்” படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் மணிகண்டனுடன் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள லவ்வர் படம் சிறப்பான வரவேற்பையும், விமர்சனங்களையும் ரசிகர்களிடத்தில் இருந்து பெற்றுள்ளது.
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மணிகண்டன், “எனக்கு 32 வருசமாக தாழ்வு மனப்பான்மை என்பது உள்ளது. என்னை பற்றி யாராவது எதாவது சொன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இத்தனை வருசம் நான் ஒரு விஷயத்துடன் வாழ்ந்து பழகிய நிலையில், திடீரென நீங்கள் அப்படி இல்லை இப்படி என சொல்வது எப்படி இருக்கும்?. இங்கு பெரும்பான்மையானவர்கள் இந்த மனநிலையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாமே கிடைத்து விடவில்லை. இதனை நம்மை நாம் அறிந்து கொள்வதன் மூலம் குறைத்துக் கொள்ள முடியும்.
மேலும் யாருமே என்னை வந்து ஒரு நடிகன் என்ற வியப்போடு எல்லாம் பார்க்க மாட்டார்கள். அது எனக்கும் ரசிகர்களை தொடர்புகொள்ள எளிதாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் ஒருவராகத்தான் பார்க்கிறார்கள். நான் கோவையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றிருக்கிறேன். நான் கேரவனில் இருந்து காட்சியில் நடிப்பதற்காக சென்று கொண்டிருந்தேன். அப்போது நேராக என்னை நோக்கி வந்த ஒருவன், கையை பிடிச்சிட்டு, ‘எங்க வீட்டுக்கு வந்துட்டு போங்க’ன்னு சொல்றான்.
நான் ஷாட்டுக்கு போறேன். முடியும் வரை காத்திருந்து என்னை அவனது வீட்டுக்கு கூட்டிப்போனான். நேராக உள்ளே சென்று தட்டில் இட்லி, சாம்பார் வைத்து சாப்பிட்டு தான் போக வேண்டும் என சொன்னான். நான் இப்பதான் சாப்பிட்டு வந்தேன்னு சொல்றேன். அதெல்லாம் எனக்கு தெரியாது சாப்பிட்டு தான் போக வேண்டும் என கூற நானும் சாப்பிட்டு தான் வந்தேன். என்னிடம் எந்த தடையும் இல்லாமல் ஒருவர் வருவது என்பது பெரிய கிஃப்ட் ஆக நான் பார்க்கிறேன். ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும், எனக்கு பிடித்த மாதிரியும் படங்கள் பண்ணுவது எனக்கு ரொம்ப பெரிய சந்தோசமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Lover Movie Review: காதலில் பிரச்சினை காதலர்களா, தவறான புரிதலா? மணிகண்டனின் "லவ்வர்" பட விமர்சனம் இதோ!