”நான் போதைப்பொருள் எடுக்கவே இல்லை!” வாக்குமூலத்தில் பல்டி அடித்த நடிகர் கிருஷ்ணா.. முழு விவரம்
நடிகர் கிருஷ்ணா தனக்கு எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன்.

போதைப்பொருள் வழக்கில் விசாரணை வலையில் சிக்கியுள்ள நடிகர் கிருஷ்ணா தனக்கு இரைப்பை அலர்ஜி உள்ளதால் தன்னால் போதைப்பொருளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையில் நடிகர் கிருஷ்ணா:
கழுகு படம் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினார். ஆனால் அவர் சினிமா படப்பிடிப்பிற்காக சென்றதாக அவரது குடும்பத்தினர் அந்த சம்மனை பெற்றுக்கொண்டனர். ‘
ஆனால் அவர் கேரளாவில் இருப்பதாக சொன்னாலும் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது, இதன் காரணமாக அவரை பிடிக்க 5 தனிப்படை போலீசார் தேடுதலில் ஈடுப்பட்ட நிலையில் அவரை தனிப்படை போலீசார் இன்று பிடித்தனர்.
வாக்குமூலம்:
இந்த நிலையில் அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் வாக்குமூலம் அளித்த நடிகர் கிருஷ்ணா தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன், தனக்கும் பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே எனக்கு தெரியும் என்பதால் பழகி வந்தேன் என்றார்
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து நான் போதைப் பொருள் வாங்கிச் செல்வதாக பிரதீப் தவறாக தெரிவித்துள்ளார் என்று நடிகர் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் வழக்கு:
பிரசாத் என்கிற அதிமுக நிர்வாகி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் பிரச்சனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீகாந்துக்காக பிரதீப் என்பவரிடம், பிரசாத் கொக்கைன் போதை மருந்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது போலீசார் விசாரணையில் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீ காந்திற்கு போதைப்பொருள் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.
இதையும் படிங்க: Srikanth: ஸ்ரீகாந்தின் சினிமா வாழ்க்கையே காலி! இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா? அதிர்ச்சி தகவல்
ஸ்ரீகாந்த் வாக்குமூலம்:
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் கைது ஆனதுக்கு முன்புதான் அவரிடம் இருந்து 250 கிராம் கொக்கைன் பாக்கெட்டை வாங்கினேன். அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில், கொக்கேன் பார்ட்டி நடத்தினேன். போதை மருந்து தொடர்பாக பிரசாத்தை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் என்னை வைத்து படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
எனக்கு அவர் தர வேண்டிய ரூபாய் பத்து லட்சம் பணத்தை கேட்டபோது, கொக்கைன் கொடுத்து பழக வைத்தார். நான் பணம் கேட்கும் போதெல்லாம், கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியதும் அவர்தான். என்று தனது வாக்குமூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
மேலும் மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா மீது அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தகவல்






















