Srikanth: ஸ்ரீகாந்தின் சினிமா வாழ்க்கையே காலி! இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா? அதிர்ச்சி தகவல்!
நடிகர் ஸ்ரீகாந்த், போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்கிற தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

போதை மருந்து பயன்படுத்தி, தவறு செய்து விட்டேன் என போலீசாரிடம் கதறி அழுது கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது .
சமீப காலமாக திரையுலகினர் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே பாலிவுட், டோலிவுட் மற்றும் மாலிவுட்டை சேர்ந்த சிலர் போதை மருந்து வழக்கில் சிக்கிய நிலையில், தற்போது கோலிவுட் திரை உலகிலும் போதைப் பொருள் பழக்கமும், போதை மருந்து பார்ட்டியும் அதிகரித்து வருவதாக வெளியாகி உள்ள தகவல், அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், தடை செய்யப்பட்ட கொக்கேன் என்கிற போதை பொருளை பயன்படுத்திய குற்றத்திற்காக நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனக்கு போதை பொருள் கொடுத்தது. தன்னை வைத்து 'தீக்கிரை' என்கிற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரும், அதிமுக முன்னாள் நிர்வாகியுமான பிரசாந்த் என்பவர் தான் என்று நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

தீக்கிரை திரைப்படத்தில் நடிக்கும் போது, அவர் தனக்கு கொடுக்க வேண்டிய பத்து லட்ச ரூபாய் பணத்தை கேட்டபோதெல்லாம், பிரசாத் தனக்கு போதை பொருளை கொடுத்து மெல்ல மெல்ல அதற்கு அடிமையாக்கியதாக தன்னுடைய வாக்குமூலத்தில் கூறி இருந்தார். அதை போல் ஸ்ரீகாந்தியின் செல்போனை சோதனை செய்தபோது அவர் சுமார் 4.7 லட்சம் ரூபாய்க்கு போதை பொருள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கிராம் போதை பொருளை ரூபாய் 12000 கொடுத்து ஸ்ரீகாந்த் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட நிலையில், அதை யாருக்கும் விற்கவில்லை என்றும்... தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறி உள்ளார். மேலும் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில். நீதிபதி வரும் ஏழாம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
மேலும் ஸ்ரீகாந்த் தரப்பில் இருந்து, தன்னுடைய மகன் உடல்நிலையை குறிப்பிட்டு ஜாமீன் வேண்டும் என கோரிய நிலையில், அதற்கு நீதிபதி சிறப்பு நீதிமன்றத்தை நாடியே ஜாமீன் பெற முடியும் என்றும், இங்கு தர முடியாது என ஜாமீன் மனுவை நிராகரித்தார்.

ஸ்ரீகாந்த் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருள் வழக்கில் சிக்கி உள்ள நிலையில், அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில், கிருஷ்ணா போலீசாரிடம் இருந்து தைப்பிக்க கேரளாவுக்கு சென்று தலைமறைவானார். எனவே அவரைப் பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்த போலீசார், தற்போது கிருஷ்ணாவை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த போதை பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் மீதான குற்றங்கள் நீதிமன்றத்தின் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சுமார் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிக்க நேர்ந்தால்... ஸ்ரீகாந்தின் ஒட்டுமொத்த சினிமா கேரியரே காலியாகிவிடும்.





















