(Source: Poll of Polls)
Actor Karthi:”இந்த விஷயத்துக்காக அண்ணன் சூர்யாவிடம் சண்டை வரும்” - கார்த்தி பேச்சு!
Actor Karthi: தனக்கும் தன் அண்ணன் சூர்யாவிற்கும் குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக அடிக்கடி சண்டை வரும் என்று பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி.

Actor Karthi: தனக்கும் தன் அண்ணன் சூர்யாவிற்கும் குறிப்பிட்ட ஒரு விசயத்திற்காக அடிக்கடி சண்டை வரும் என்று பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.
அந்த வகையில் கார்த்தியின் 26 வது படமான இந்த படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அண்ணன் சூர்யாவிடம் சண்டை:
இச்சூழலில் தான் அண்ணன் சூர்யாவிடம் ஒரு குறிப்பிட்ட விசயத்திற்காக அடிக்கடி சண்டை வரும் என்று கலகலப்பாக பேசியுள்ளார் கார்த்தி. இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,”இரண்டு சொர்க்கங்கள் சென்னையில் உள்ளது. ஒன்று எத்திராஜ் கல்லூரி மற்றொன்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி. ஒவ்வொரு முறையும் அந்த சாலையில் செல்லும் போது பின்னணியில் ஒரு இசை சத்தம் கேட்கும். பத்து ஆண்கள் இருக்கையில் ஒரு பெண் தைரியமாக சென்று விடலாம் ஆனால் பத்து பெண்கள் இருக்கையில் ஒரு ஆண் தைரியமாக செல்ல முடியாது.
நான் முதலாமாண்டு கல்லூரி படிக்கையில் எனது தோழிக்கு கல்லூரியில் சேர்ப்பதற்காக விண்ணப்பம் வாங்க உள்ளே சென்று கொண்டிருந்தேன் அப்போது ஒரு 10 பெண்கள் எங்க போற என்று என்னை கேட்டார்கள். அப்போது தான் எத்திராஜ் என்றால் என்ன என்பது தெரிந்தது. அதைப்போல், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எனது தங்கைக்கு சீட் கிடைத்தது. நானும் எனது அண்ணன் சூர்யாவும் நிறைய முறை சண்டை போட்டு இருக்கிறோம். இதில் அதிகம் சண்டை போட்டது எனது தங்கையை கல்லூரியில் இருந்து யார் அழைத்து வருவது என்பதற்காகத்தான் அதிகம் சண்டை வரும்”என்று கலகலப்பாக பேசியுள்ளார்





















