Thalaivar 173 : ரஜினிக்கு கதை பிடிக்கனும்...சுந்தர் சி விலகியது குறித்து கமல் ஓப்பன் டாக்
ரஜினியின் தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியது குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார்

ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கமல் ரஜினியிடம் தெரிவிக்காமல் சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. அதே நேரம் மீண்டும் இப்படத்தை இயக்க சுந்தர் சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சில தகவல்கள் வந்துள்ளன. இப்படியான நிலையில் தலைவர் 173 படத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்
தலைவர் 173 பற்றி கமல்
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கமலிடம் சுந்தர் சி மறுபடியும் இப்படத்தில் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் " சுந்தர் சி தன்னுடைய கருத்தை பேப்பரில் தெரிவித்துள்ளார். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு முதலீட்டாளன். என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது. அதை தான் நாங்கள் பண்ணிருக்கோம். அவருக்கு பிடிக்கும் வரை நாங்கள் கதை கேட்டுக் கொண்டுதான் இருப்போம். தலைவர் 173 படத்தை புதிய இயக்குநர் இயக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கு கதை நல்லா இருக்க வேண்டும் " என கமல் கூறினார்
ரஜினியுடன் இணைந்து நடிப்பது பற்றி கமல்
ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து கமல் " அதற்கு நாங்கள் இன்னொரு கதையை தேடிக்கொண்டிருக்கிறோம். எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என கமல் தனது பேச்சை முடித்தார்




















