பெருங்கடலில் சிறு துளி நான்... விக்ரம் படம் குறித்து நெகிழ்ந்த காளிதாஸ்!
விக்ரம் திரைப்படத்தின் பெருங்கடலில் ஒரு துளி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரே ஒரு ஆண்டவர் கமல்ஹாசனுடன் இணைவதில் மகிழ்ச்சி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் திரைப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் ஃபகத் பாசில் , விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிரெண்டானதை தொடர்ந்து, விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த 16ஆம் தேதி தொடங்கி, முதல் நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு, அன்று முதல் தொடங்கியது. படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் நடித்து வரும் நிலையில், ஃபாகத் ஃபாசில் தற்போது படக்குழுவினருடன் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியுடன், கமல்ஹாசன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலனது.
Welcoming the extremely talented @kalidas700 to our ACTION-CLUB!👊🏻#Vikram💥 pic.twitter.com/XYYghzOUbV
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 31, 2021
இந்நிலையில், ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயராமனின் மகனும், நடிகருமான காளிதாஸ் இணைந்துள்ளார். இதுகுறித்து காளிதாஸ் ஜெயராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விக்ரம் திரைப்படத்தின் பெருங்கடலில் ஒரு துளி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரே ஒரு ஆண்டவர் கமல்ஹாசனுடன் இணைவதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாருக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.
Extremely elated to be a drop in this ocean of a film #Vikram ,
— kalidas jayaram (@kalidas700) July 31, 2021
Happy to join back with the one and only #Andavar @ikamalhaasan sir 🙏
Thank you @Dir_Lokesh sir for this opportunity ❤️#arambichitom @RKFI pic.twitter.com/0pq9xi2uMM
முன்னதாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கிம் நடிகர் ஃபாகத் ஃபாசில் இணைந்தார். அப்போது கமல்ஹாசனுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், அங்கமாலி டைரிஸ் படத்தில் பெப்பேவாக தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர், அவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். கொரோனா ஊரடங்கு தேர்தல் பரபரப்புக்களை அடுத்து தற்போது படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.