சுடுகாட்டில் நடந்த ஷூட்டிங்...வெளியே காத்திருந்த பிணங்கள்...சினம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
இந்தாண்டு மட்டும் அருண்விஜய் நடிப்பில் ஓ மை டாக், யானை, தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை நடிகர் காளி வெங்கட் பகிர்ந்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனும் நடிகருமான அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டதட்ட 20 ஆண்டுகளாக தனக்கென அங்கீகாரம் கிடைக்காமல் தவித்த அவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் என்னை அறிந்தால் படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் விக்டர் என்னும் வில்லன் கேரக்டரில் அவர் அசத்தியிருந்தார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை என கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தாண்டு மட்டும் அருண்விஜய் நடிப்பில் ஓ மை டாக், யானை, தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 16 ஆம் தேதி சினம் படமும், அக்டோபர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே சினம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் காளிவெங்கட், சினம் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். காரணம் லாக்டவுன் சமயத்தில் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த கமிட்மென்ட் காரணமாக கடன் வாங்க ஆரம்பித்தேன். கடன் கொடுப்பவர்களிடம் கூட பணம் இல்லாமல் போய் விட்டது. ஆனால் ஒருநாள் காலையில் ஒரே பேமண்டில் என் பணத்தை விஜயகுமார் என கொடுத்தார். அதைக் கொண்டு என் கடனை அடைத்தேன். இந்த படத்தில் எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஒன்று உள்ளது.
மயிலாப்பூர் பக்கத்தில் ஒரு சுடுகாட்டுல ஷூட்டிங் நடக்குது. வேற துறையில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா என தெரியல. நமக்கு சுடுகாட்டுல ஷூட்டிங் நடந்தா அங்கதான் உட்கார்ந்து சாப்பிடணும். 2 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ஒரு பாட்டின் மான்டேஜ் ஷாட் எடுத்தாங்க. அங்க ரொம்ப நேரம் இருந்ததால அங்கிருந்த ஊழியர்கள் எனக்கு ரொம்ப நெருக்கமா மாறிட்டாங்க. மறுநாள் எங்கிட்ட வந்து எப்ப ஷூட் முடியும்ன்னு கேட்டாங்க. நான் ஏன் கேக்குறீங்க என கேட்டேன். அதற்கு வெளியே 3 பிணங்கள் காத்திருப்பதாக தெரிவித்தனர்.
View this post on Instagram
அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சி கிளம்புறப்ப ஊழியர்கள் நேரம் கிடைச்சா இங்க வந்துட்டு போங்க அப்படின்னு சொன்னாங்க என காமெடியாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் நான் ஒருநாள் அங்கே சென்று அவர்களை சந்தித்தேன். அவர்கள் அழைத்ததன் பேரில் வீட்டுக்கு சென்று குடும்பத்தையும் சந்தித்தேன் என தெரிவித்துள்ளார்.