மேலும் அறிய
Actor Jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையோர தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கியது.

நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கியது
Source : ABP NADU
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே நடிகர் ஜீவாவின் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக ஜீவா மற்றும் அவரது மனைவியும் உயிர்த்தப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது அம்மையகரம் கிராமம். இன்று சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான சொகுசு காரில் சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மைகரம் கிராமத்தின் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நபர் ஒருவர் வந்ததாகவும் அவர் மீது மோதாமல் இருக்க நடிகர் ஜீவா காரை திருப்பிபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி சொகுசு காரானது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் காரை மீட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















