மேலும் அறிய

13 Years of Thillalangadi: ‘சொல்பேச்சு கேட்காத சுந்தரியே’.. 13 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தில்லாலங்கடி’ ..!

தில்லாலங்கடி படம் தெலுங்கில் 2009 ஆம் ஆண்டில் ரவி தேஜா , இலியானா டி குரூஸ் மற்றும் ஷாம் நடிப்பில்,  சுரேந்தர் ரெட்டி இயக்கிய கிக் படத்தின் ரீமேக் ஆகும்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான தில்லாலங்கடி படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

தில்லாலங்கடி:

இப்படம் தெலுங்கில் 2009 ஆம் ஆண்டில் ரவி தேஜா , இலியானா டி குரூஸ் மற்றும் ஷாம் நடிப்பில்,  சுரேந்தர் ரெட்டி இயக்கிய கிக் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை தமிழில் ஜெயம் ரவி நடிக்க, அவரது அண்ணனும் இயக்குநருமான ராஜா இயக்கினார். இவர்களது அப்பா எடிட்டர் மோகன் தயாரித்தார். இதன் மூலம்  ஜெயம் , எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , சம்திங் சம்திங்...உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களுக்குப் பிறகு மூவரின் கூட்டணியில் உருவான 5வது ரீமேக் படம் இதுவாகும். 

இந்த படத்தில் தமன்னா, ஷாம், சஞ்சிதா ஷெட்டி, வடிவேலு, தமன்னா, லிவிங்க்ஸ்டன், ராதாரவி, நளினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 

படத்தின் கதை 

எந்த ஒரு விஷயத்திலும் கிக் வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக செய்ய நினைக்கும் ஜெயம் ரவி,  ஒரு கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக அரசியல்வாதிகளிடம் இருந்து முறைகேடாக சம்பாதித்த பணத்தை திருடுகிறார். இந்த திருடனை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக ஷாம் வருவார். ஆனால் ஷாமுடன் தான் ஜெயம் ரவி வலம் வருவார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும். இதில் தமன்னாவுடன் காதல், வடிவேலு மற்றும் சந்தானத்தின் காமெடி என கலந்து கட்டி கொடுத்தாலும் இப்படம் ரசிகர்களை கவரவில்லை. 

படத்தில் இடம்பெற்றிருந்த வடிவேலு மற்றும் சந்தானத்தின் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுகிறது. யுவனின் இசையில் ‘சொல் பேச்சு கேட்காத சுந்தரி’ பாடல் ஆல்டைம் பேவரைட் ஆக  அமைந்தது. இதில் 360 டிகிரி கோணத்தில் சுற்றும் கேமரா பயன்படுத்தப்பட்டு ரசிகர்களை கவரும் வகையில் படமாக்கப்பட்டது. 

கூடுதல் தகவல்கள் 

தில்லாலங்கடி படத்தின் ஜெயம் ரவி மற்றும் தமன்னா நடித்த முதல் காட்சியை பிரமாண்ட இயக்குநர் எஸ். ஷங்கர் இயக்கினார். அந்த காட்சிக்கான கிளாப் ஷாட்டை நடிகர் விஜய் அடித்தார். மேலும் இந்த பட நிகழ்ச்சியில் அப்போதைய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன், கே.ஆர்.ஜி., அபிராமி ராமநாதன், எஸ்.ஏ. சந்திரசேகர் , ஆர்.பி. சௌத்ரி, ராம் குமார், கஸ்தூரி ராஜா , பி.எல்.தேனப்பன், நடிகர் கார்த்தி மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Embed widget