Fahadh Faasil | இது 'விக்ரம்' ஸ்பெஷல் - கமலுடன் ஃபாகத்.. செல்ஃபியை ஷேர் செய்த மலையாள நாயகன்!
ஃபாகத் ஃபாசில் தற்போது படக்குழுவினருடன் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியுடன், கமல்ஹாசன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலனது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் ஃபாகத் ஃபாசில் இணைந்துள்ளார். அப்போது கமல்ஹாசனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் ஃபகத் பாசில் , விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
— Kamal Haasan (@ikamalhaasan) July 10, 2021
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம்…#Arambichitom @RKFI @Dir_Lokesh @VijaySethuOffl #FahadFaasil @anirudhofficial pic.twitter.com/cRjSUOyQ7F
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிரெண்டானதை தொடர்ந்து, விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த 16ஆம் தேதி தொடங்கி, முதல் நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு, அன்று முதல் தொடங்கியது. படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் நடித்து வரும் நிலையில், ஃபாகத் ஃபாசில் தற்போது படக்குழுவினருடன் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியுடன், கமல்ஹாசன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலனது.
தற்போது, ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் ஃபாகத் ஃபாசில் இணைந்துள்ளார். அப்போது கமல்ஹாசனுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வளர்ந்துவரும் இளம் இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டார் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தன்னுடைய யதார்த்தமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகு சுலபத்தில் ஈர்த்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி’யை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. பல ஆண்டுகளாக ரசிகனாக நடிகர் விஜயை ரசித்துவந்த லோகேஷ் ’மாஸ்டரை’ இயக்கி, கடந்த பொங்கலுக்கு வெளியிட்டார். இந்நிலையில் தனது திரையுலக பயணத்தில் அடுத்த மயில்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கிவருகிறார்.
படத்தில் இணைகிறேன் என்று ஃபாகத் ஃபாசில் ஒரு நிகழ்ச்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் இடையில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக விஜய் சேதுபதியும் படத்தில் இணைந்தார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், அங்கமாலி டைரிஸ் படத்தில் பெப்பேவாக தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர், அவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். கொரோனா ஊரடங்கு தேர்தல் பரபரப்புக்களை அடுத்து தற்போது படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.