Captain Miller Update: வசூலை அள்ள தனுஷ் போட்ட பிளான்.. வெளிநாட்டில் கேப்டன் மில்லர் ஆடியோ லாஞ்ச்..? திட்டம் என்ன..!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா, வெளிநாட்டில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா, வெளிநாட்டில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் ”கேப்டன் மில்லர்”
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தொடரி, மாறன் மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களின் வரிசையில் 4வது முறையாக தனுஷ் தற்போது பணியாற்றி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தொடரி, மாறன், பட்டாஸ், படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். அந்த படத்திற்கு ‘கேப்டன் மில்லர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
படக்குழு விவரங்கள்:
‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரலாற்றுப் பின்னணியிலும், 1930களின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தீப் கிஷன், ஜான் கொக்கென் மற்றும் நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
வெளிநாட்டில் இசைவெளியீட்டு விழா:
நடப்பாண்டு இறுதிக்குள் இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் இசைவெளியீட்டு விழா தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் இசைவெளியிட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், படத்திற்கான வியாபாரம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மற்றும் அஜித் போன்றோருக்கு இருப்பதை போன்று தனுஷின் படங்களுக்கு வெளிநாட்டில் பெரிய வணிகம் இருப்பதில்லை. அதனால், படத்தின் இசைவெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவதன் மூலம், எதிர்பார்ப்பை அதிகரித்து வியாபாரத்தை பெருக்க கேப்டன் மில்லர் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்திற்கான கெட்டப்பில், தனுஷ் மும்பை பயணம் சென்றுள்ளார்.
படப்பிடிப்பில் பிரச்சனை:
இதனிடையே, தென்காசி மாவட்டப் பகுதிகளில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்தது. அப்போது, மத்தளம்பாறை கிராமத்துக்கு அருகேயும் முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அருகேயும் முறையான அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டது. மேலும் முறையான அனுமதியின்றி குண்டு வெடிப்பு காட்சிகள் உள்ளிட்டவையும் அங்கு படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, அங்கு படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்தரன் உத்தரவிட்டார். பின்பு படக்குழுவினர் படப்பிடிப்பிற்கான உரிய அனுமதி பெற்று சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த பின் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது.