மேலும் அறிய

21 Majestic Yrs Of DHANUSH: 'தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளம்’... தனுஷ் எண்ட்ரி கொடுத்து 21 வருஷங்களாச்சு..

தமிழ் சினிமாவுக்கு நடிகர் தனுஷ் அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ் சினிமாவுக்கு நடிகர் தனுஷ் அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை டிரான்ஸ்பர்மேஷன் என்பது சகஜமாக நடைபெறக்கூடிய ஒன்று. இன்றைக்கு தூற்றப்படுபவர்கள் நாளைக்கு போற்றப்படுவார்கள் என சொல்வார்கள். அதற்கு ஒரு உதாரணம் ஆரம்ப காலத்தில் நடிகர் விஜய்க்கு நிகழ்ந்தது. அதன்பிறகு தற்போதைய நடிகர்களில் அதிகம் எதிர்கொண்டது தனுஷ் தான். 

சினிமா பின்னணியும் சினிமா எண்ட்ரீயும்

வெங்கடேஷ் பிரபு என்ற இயற்பெயர் கொண்ட தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா 90களில் மிகப்பெரிய இயக்குநர். இவரின் மகன்களான செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்கள். தனுஷ் ஹீரோவாக அப்படத்தில் நடிக்க செல்வராகவன் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் டைட்டிலில் இடம் பெற்றது என்னவோ கஸ்துரிராஜாவின் பெயர் தான்.

இந்தப் படத்தை திரையரங்களில் பார்த்த ரசிகர்களும் விமர்சனம் எழுதிய ஊடகங்களும் தனுஷை உருவ கேலி செய்தனர். இதெல்லாம் ஒரு மூஞ்சா யார் நடிக்க கூப்பிட்டார் என கடுமையான விமர்சனங்கள் சொன்ன அதே மனிதர்கள் தான் இன்று தனுசை நடிப்பின் அசுரன் என பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். தனுசுக்கு நடிக்கவும் தெரியுமா என்கிற அளவுக்கு இப்படம் அவருக்கு நல்ல விசிட்டிங் கார்டு ஆக அமைந்தது. தொடர்ந்து இதன் பின்னர் திருடா திருடி படம் வெளியாகி அதில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இந்தப் பாட்டில் தனுஷ், சாயா சிங் இருவரும் இடைவிடாமல் நடனமாடியிருப்பார்கள். இந்தப் பாட்டை பார்த்த சிறியவர் முதல் பெரியவர் வரை யாருடா இந்த ஒல்லியான பையன் என தனுசை கொண்டாடத் தொடங்கினார்கள். 

நடிப்பு மன்னன்

இதற்குப் பிறகு புதுக்கோட்டையில் இருந்து சரவணன், அது ஒரு கனாக்காலம், சுள்ளான் என பல படங்களில் நடித்த தனுஷ் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் நடித்தார். ரிலீஸ் ஆன சமயத்தில் தோல்வியை சந்தித்த இப்படம் இன்று ரசிகர்களின் கிளாசிக் படங்களில் ஒன்றாக உள்ளது.

தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் வெளியானது. இந்தப் படம் தான் தன்னுடைய பிளஸ் பாயிண்ட் இளைஞர்கள் தான் என்பது தனுஷூக்கு புரிய வைத்தது. சரியாக இளைஞர்களை கவரும் வகையில் படங்களை தேர்வு செய்து முன்னேற தொடங்கினார். 

அதேசமயம் 2011 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் படத்தில் நடித்தார். இந்தப்படம் தனுசுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகளை வென்ற இந்தப் படம் தமிழ் சினிமாவில் தனுஷ் என்றால் யார் வெற்றிமாறன் என்றால் யார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தொடர்ந்து இந்த கூட்டணி இணையும் போதெல்லாம் தேசிய விருது நிச்சயம் என்பது எழுதப்படாத விதியாக அமைந்தது. 

வெற்றிமாறன் தனுஷ் இருவரும் வடசென்னை படத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக அசுரன் படத்தில் இணைந்தனர். இந்த படத்திற்காக இரண்டாவது முறையாக தனுஷ் தேசிய விருதை பெற்றார். இதிலிருந்து தான் தனுஷ் நடிப்பின் அசுரன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

அதேசமயம் யாரடி நீ மோகினி,படிக்காதவன்,மாப்பிள்ளை,உத்தமபுத்திரன், குட்டி, வேங்கை,3, வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, தங்கமகன், கொடி, தொடரி, வடசென்னை, கர்ணன், ஜகமே தந்திரம் திருச்சிற்றம்பலம்,வாத்தி என தனுஷ் படம் என்றால் நம்பி தியேட்டருக்கு செல்லலாம் என்னும் நிலையை உருவாக்கினார். 

பிற மொழிகளில் ஆதிக்கம்

தனுஷின் திறமை தமிழ் சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்றது. The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள அவர் ஹிந்தியிலும் ராஞ்சனா, ஷமிதாப், அட்ராங்கி ரே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பன்முகத் திறமை வாய்ந்தவர்

பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனரானார் தனுஷ். அதே சமயம் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என இந்த 21ம் நூற்றாண்டில் பன்முகத் திறமை வாய்ந்த சினிமா பிரபலங்களில் முக்கியமான ஒருவராக தனுஷ் திகழ்கிறார். தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் தனுசை இந்த இனிய நாளில் கொண்டாடுவோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Embed widget