மேலும் அறிய

Thalapathy Vijay: “இதுதான் நட்பின் இலக்கணம்” நடிகர் தாமு வாழ்க்கையில் மிகப்பெரிய உதவி செய்த விஜய்!

ரஜினி, விஜய், அஜித், பிரசாந்த்,சரத்குமார், பிரபுதேவா, சத்யராஜ் உள்ளிட்ட அன்றைய காலக்கட்டத்தின் அத்தனை முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானார் தாமு.

தன்னுடைய வாழ்க்கையில் நடிகர் விஜய் பங்கு எந்தளவு முக்கியமானது என்பதை நடிகர் தாமு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

நடிகர், மிமிக்ரி கலைஞர் தாமு:

வானமே எல்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தாமு. ரஜினி, விஜய், அஜித், பிரசாந்த்,சரத்குமார், பிரபுதேவா, சத்யராஜ் உள்ளிட்ட அன்றைய காலக்கட்டத்தின் அத்தனை முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானார். கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தாமு மிமிக்ரி கலைஞராகவும் வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய தாமு,  ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாமிடம் உதவியாளராக பணியாற்றினார். தற்போது கல்வித்துறையில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். 

ஆனால் பள்ளி மாணவர்களிடையே இவர் பேசியது மிகப்பெரிய அளவில் வைரலானது. அதேசமயம் பள்ளி மாணவர்களின் அவரின் பேச்சை கேட்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. தாமு பேசும் போது மாணவ, மாணவிகள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இப்படியான நிலையில் தாமு நடிகர் விஜய் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Raja (@arun_singleboy7)

தாமு நெகிழ்ச்சி பேச்சு:

விஜய் மற்றும் தாமு இணைந்து நாளைய தீர்ப்பு, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, என்றென்றும் காதல், கண்ணுக்குள் நிலவு, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, கில்லி,போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இப்படியான நிலையில் தாமு பேசிய அந்த வீடியோவில், “சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 40 நாடுகளை கலந்து கொண்ட மிமிக்ரி போட்டி நடைபெற்றது. அதில் ஜூராசிக் பார்க் டைனோசர் மாதிரி மிமிக்ரி செய்து முதல் பரிசு பெற்றேன். அந்த ஜூராசிக் படத்தை வாயிலேயே மிமிக்ரி செய்து ஜெயிச்சிட்டு வந்தேன். அதற்கு என்னை தயார் படுத்தியது என்னுடைய நண்பன் தான். ஜூராசிக் படத்துல டைனோசர் சவுண்டை மட்டும் தனியாக எடிட் பண்ணி, இதை பாரு வித்தியாசமா இருக்குல.

இதை காதில் போட்டுக்கொண்டு திரும்ப திரும்ப கேட்க வைக்கிறான். இது சரியா வருமா என நான் கேட்க, அதே மாதிரி வரும் என சொல்கிறான். நானும் அவன் சொன்ன மாதிரி ஜெனிவா போட்டியில் கலந்து கொண்டு ஜெயிச்சிட்டேன். இன்னைக்கு நானும் ஜெயிச்சிட்டேன், அவனும் வேற லெவலுக்கு போயிட்டான். அவன் தான் என் நண்பன் இளைய தளபதி விஜய்” என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget