Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு உதவ மறுத்த தீபக்.. இப்படி எல்லாம் நடக்குமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்ட நடிகர் சிவகார்த்திகேயன், தான் உதவ மறுத்த சம்பவத்தை சம்பவத்தை நடிகர் தீபக் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம்.
நடிகர் ஸ்ரீகுமார் உடனான நேர்காணலில் பேசிய தீபக், “ஒருமுறை நான், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் எல்லோரும் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டோம். விஜய் டிவியில் பணியாற்றிய ஸ்ரீராமின் மகன் படிக்கும் பள்ளியில் தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நான் காரை பார்க்கிங்கில் விட்டு வர 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. அதற்கு சிவகார்த்திகேயன் மேடையில் தன் பாணியில் அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்.
பின்னர் மேடையில் என்னை அழைத்து உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என கூறினார். என்ன சிவா என கேட்டேன். அதற்கு, “நான் இப்ப இதை உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். நம்ம ஷூட்டிங் நடக்கும்போது நான் உங்களிடம் எனக்கு சீரியலில் ஏதாவது வாய்ப்பு வாங்கி தாங்க என கேட்டேன். நீங்க என்கிட்ட, சீரியல் எல்லாம் நீ பண்ண வேண்டாம், சினிமாவில் முயற்சி பண்ணு என சொன்னீங்க. அன்றைக்கு நான் உங்கமேல ரொம்ப கோபப்பட்டேன். எனக்கு ரொம்ப அதிருப்தி இருந்தது என சிவகார்த்திகேயன் கூட, அதைக் கேட்டு நான் ஷாக் ஆகிவிட்டேன்.
என்னடா இப்படி சொல்லிட்டியே என நான் சொல்ல, இல்ல நீங்க எனக்கு உதவி கூட பண்ண மாட்டேங்குறீங்களே, அட்வைஸ் பண்ணி அனுப்பிச்சிட்டீங்கன்னு நினைச்சேன். ஆனால் ரொம்ப நன்றி, நீங்க சொன்ன அப்புறம் தான் சினிமாவில் நான் முயற்சி செய்தேன். இல்லையென்றால் நீங்க சொன்ன மாதிரி நான் சின்னத்திரை வட்டத்திலேயே முயற்சி செய்திருந்தேன், வெளியில வந்துருக்க முடியாது. அன்னைக்கு நான் நிஜமாகவே ஃபீல் பண்ணேன். ஆனால் இன்றைக்கு அந்த அட்வைஸ் ரொம்ப உதவியா இருந்தது. ரொம்ப நன்றி என சிவா கூறினான். அதைக் கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு நிகழ்ச்சியாகும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன்பின்னர் 2012ம் ஆண்டு வெளியான மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக உள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






















