Deepa Sankar: "அவரோட பைக்ல ஒரு ரவுண்டு..": காதல் பத்தி பேசி நெகிழ வைத்த தீபா!
நடிகை தீபா சங்கர் என்றாலே விஜய் டிவி நினைவுக்கு வந்துவிடும். விஜய் டிவியில் அத்தனை சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீபா வெளிப்படுத்திய வெகுளித்தனம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
நடிகை தீபா சங்கர் என்றாலே விஜய் டிவி நினைவுக்கு வந்துவிடும். விஜய் டிவியில் அத்தனை சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீபா வெளிப்படுத்திய வெகுளித்தனம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
சிறு வயதிலிருந்தே சீரியல்களில் தீபா நடித்து வரும் விஷயம் ஒரு சிலருக்கே தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்த தீபா சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இருக்கிறார். திருமண வாழ்க்கைக்கு பிறகு சில காலம் நடிப்பு தொழில் வாழ்க்கையை விட்டு ஒதுங்கி இருந்தார். இவர்க்கு 2 மகன்கள் உள்ளனர். பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் தீபா சங்கர்.
இப்போது தீபா சங்கர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். குக் வித் கோமாளி ஷோ போல் Mr & Mrs சின்னத்திரை சீசன் 3-யிலும் தீபா சங்கர் ஒரு கலக்கு கலக்கினார்.
தீபாவின் யூடியூப் பேட்டி ஒன்று தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவருக்குள் இத்தனை விஷயமா என்று வியக்கும் அளவுக்கு அவர் பேசியிருக்கிறார். அவரது வெள்ளந்தி பேச்சு, யதார்த்த சிரிப்பு, வாழ்க்கையைப் பற்றிய நிதானமான பார்வை என்று அவருடைய பேட்டி முழுவதும் கலகலவென அமைந்துள்ளது.
“பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யாதீர்கள். பெண் பிள்ளைகளும் பாலியல் வன்முறைக்கு அஞ்சி அடங்கிப் போகாதீர்கள். உங்களை யாரேனும் சீண்டினால் அதற்கு அவமானப்பட்டு படிப்பை நிறுத்தாதீர்கள். விமர்சனங்கள், சீண்டலகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு லட்சியத்தை நோக்கிப் பயணியுங்கள்.
அப்புறம் ஆண், பெண் பேதமெல்லாம் மாறிவருகிறது. ஆணும் வேலைக்கு போகிறான். பெண்ணும் வேலைக்குப் போகிறாள். பெண்ணுக்கு நிதி மேலாண்மை தெரிந்தால் ஆண்கள் அவர்களிடம் ஈகோ பார்க்காமல் பணத்தைக் கொடுத்து நிர்வகிக்கச் சொல்லுங்கள். சமூகத்தில் மாற்றம் வந்தாலும்கூட ஒருசிலர் மட்டுமே இன்னும் பிறரை விமர்சனம் பண்ணிக்கிட்டே இருக்காங்க.
பெண்களை தவறாக விமர்சனம் பண்ணாதீங்க. பொண்ணுங்க முந்தி மாதிரி இல்லை. அவுங்க அறிவை பயன்படுத்தி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
எனக்கு என் கணவர் தான் எல்லாமே. என் கணவர் அவ்வளவு சப்போர்ட். அவர் குடும்பத்தை கவனிச்சிக்கிட்டு என்னை வேலைக்கு அனுப்புகிறார். அதனால் அவர் சோம்பேறி என்று அர்த்தமில்லை. அவர் என்னை மதிக்கிறார். எனக்கு ரொமான்ஸ் என்றால் எப்போதெல்லாம் மூச்சுமுட்டும் சோகம் வருதோ அப்போ என் கணவரோடு பைக்கில் ஒரு ரவுண்ட் செல்வேன். அதுதான் எனக்கு பெரிய ரொமான்ஸ்” என்று யதார்த்தமாகப் பேசினார் தீபா.