(Source: ECI/ABP News/ABP Majha)
Naane Varuven: தனுஷ் படத்தை பார்த்து ரிவியூ சொன்ன STR சீடர் கூல் சுரேஷ்... ஆனால் அவர் சொன்ன வார்த்தை தான்...!
நானே வருவேன் படத்தை சென்னை ரோகிணி திரையரங்கில் தயாரிப்பாளர் தாணு ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். அப்போது அதே தியேட்டரில் படம் பார்த்த நடிகர் கூல் சுரேஷ் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்துக்கு நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ள நிலையில் படம் இன்று தியேட்டர்களில் வெளியானது.
View this post on Instagram
பல இடங்களில் காலை 4 மணி காட்சிகள் இல்லாமல் 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், சில ஊர்களில் மட்டும் சிறப்பு காட்சிகள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது. இதனால் நள்ளிரவு முதலே தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர். கட் அவுட், பேனர், மேளதாளம் என தியேட்டர்களை திருவிழா நடக்கும் இடமாகவே ரசிகர்கள் மாற்றி விட்டனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை சென்னை ரோகிணி திரையரங்கில் தயாரிப்பாளர் தாணு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். அப்போது அதே தியேட்டரில் படம் பார்த்த நடிகர் கூல் சுரேஷ் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூல் சுரேஷ், ”நான் நானே வருவேன் படம் பார்க்க வந்ததற்கு முதல் காரணமே தனுஷ் ரசிகர்கள் தான். எனக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் அவர்களில் ஒருவர்.
#NaaneVaruvean Celebration #CoolSuresh 👀🥳 @dhanushkraja#NaaneVaruveanFDFS "1st Half" "First Half" #Dhanush #Selvaragavan #BlockBusters #NaaneVaruveanEuphoriaToday pic.twitter.com/79dfH8i9SK
— Thalapathy Viji (@BrokenViji) September 29, 2022
மேலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்க காரணம் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தான். செல்வராகவன் படத்தை எடுக்க தயாரிப்பாளருக்கு நிஜமாகவே ஒரு தைரியம் வேண்டும். வி கிரியேஷன்ஸ் என்றாலே வெற்றி தான். அதேபோல் தனுஷ் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். இயக்குநர் செல்வராகவன் நீங்க 2, 3 காட்சிகளில் வந்தாலும் அடுத்து ஒரு ஹீரோ உருவாகியிருப்பதாக தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே நடிகர் கூல் சுரேஷூக்கு தனுஷ் ரசிகர்கள் யூட்யூப் சூப்பர் ஸ்டார் என்ற கேப்ஷன் கொண்ட போட்டோ ஒன்றை வழங்கினர்.