Chaplin Balu: “விவேக் எனக்கு கடவுள் மாதிரி.. இறந்தப்போ நான் பாக்கல” - நடிகர் சாப்ளின் பாலு
பெண்ணின் மனதை தொட்டு படத்தில் நான், விவேக், மயில்சாமி ஆகியோர் நடித்த அந்த காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. நான் நிறைய காமெடி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கவுண்டமணி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
விவேக் எனக்கு கடவுள் மாதிரி, அதனால் அவரை கடவுள் விரைவாக அழைத்து கொண்டாரா என தெரியவில்லை என நடிகர் சாப்ளின் பாலு தெரிவித்துள்ளார்.
அதில், “தமிழ் சினிமாவில் துணை வேடங்களில் நடிக்கும் நபர்கள் சிலரால் காலத்துக்கும் கவனிக்கப்படுவார்கள். அந்த வகையில் சாப்ளின் பாலுவும் ஒருவர். பெண்ணின் மனதை தொட்டு, ஷாஜகான், கில்லி, ஒன்ஸ்மோர், கில்லி, மிட்டா மிராசு என ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை பற்றி பேசினார்.
கில்லி படத்தில் ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அந்த படத்தில் நான் இருக்க காரணம் இயக்குநர் தரணியும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும் தான். படம் ரீ-ரிலீஸில் ரூ.30 கோடி வசூலை காண காரணம் விஜய் தான். விவேக் எனக்கு கடவுள் மாதிரி. நான் அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கேன். விவேக் மரணத்திற்கு நான் போகவில்லை. அந்த பலம் எனக்கு இல்லாமல் இருந்தது.
பெண்ணின் மனதை தொட்டு படத்தில் நான், விவேக், மயில்சாமி ஆகியோர் நடித்த அந்த காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. நான் நிறைய காமெடி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கவுண்டமணி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் 10 ஆண்டுகளாக மன உளைச்சலால் கஷ்டப்பட்டேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பெண்ணை காதலித்து 10 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்துக் கொண்டேன்.
என் மகள் பெயர் ஜெயவானதி. மின்சார கண்ணா படத்தின் ஷூட்டிங்கின் போது பிறந்த அவளுக்கு பெயர் வைத்தவர் விஜய் தான். அம்மாவிடம் கேட்டு விட்டு வந்து வந்து சொன்னார். அதேபோல் அடுத்ததாக கில்லி படத்தின்போது மகன் பிறந்தான். மலையாள இயக்குநர் வினயனை ரொம்ப பிடிக்கும். அவர் பெயரை வைத்தேன்.
ஒருநாளைக்கு ரூ.25 சம்பளத்தில் தொடங்கி கில்லி படத்தின்போது ஓரளவு அதிகமாகவே வாங்கினேன். நான் வடிவேலுவுடன் 4 படம் தான் இணைந்து நடித்தேன். அவர் பீக்கில் வருவதற்கு முன்னாடி நான் வெளியே போனேன். வடிவேலு நடிகர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள விஷயத்தில் தலையிடுவார். நான் சிக்காமல் வெளியே வந்து விட்டேன். நான் மொத்தம் 150 படங்களில் நடித்திருக்கேன். அதில் விஜய்யுடன் 15 படங்களில் நடித்துள்ளேன்” என சாப்ளின் பாலு கூறியுள்ளார்.