Ashok Selvan Next Movie : கமல்ஹாசனின் உதவி இயக்குனர் படத்தில் நடிக்கும் அசோக்செல்வன்...!
கமல் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் புதிய படத்தில் நடிக்கிறார்
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அசோக் செல்வன். பில்லா 2ம் படத்தில் இளவயது அஜீத்தாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி என வித்தியாசமான கதையம்சம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர். கடந்த 2020ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலமாக மிகவும் பிரபலமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் அசோக்செல்வன் தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் நாயகியாக இளம் நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை.
பெயரிடப்படாத இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 8-ந் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஓ மை கடவுளே வெற்றிக்கு பிறகு அசோக் செல்வன் மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மன்மதலீலை திரைப்படம் அவருக்கு கலவையான விமர்சனத்தை பெற்றுத்தந்தது.
பின்னர், அசோக் செல்வன் நாயகனாக நடித்த ஹாஸ்டல், சில நேரங்களில் சில மனிதர்கள் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் வேழம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மூன்று கதாநாயகிகளை கொண்ட இந்த திரைப்படம் வரும் 24-ந் தேதி வெளியாக உள்ளது. தற்போது, நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் அசோக்செல்வன் நடித்து வருகிறார்.
அவரது புதிய படத்தை இயக்க உள்ள இயக்குனர் கார்த்திக் உலக நாயகன் கமல்ஹாசன்நடித்து இயக்கிய விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Vikram Movie: வேகமெடுக்கும் விக்ரம்.. தயாராகும் ரசிகர்கள்.. வெளியானது முதல் விமர்சனம்..!
மேலும் படிக்க : Nayanthara Marriage Time: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்.. 200 விஐபிக்கள்.. முகூர்த்த நேரம் இதுதான்..!
மேலும் படிக்க : வி.ஏ.ஓவால் எப்படி சின்னத்திரையில் நடிக்க முடியும்? - ராமர் குறித்து தாசில்தார் சொல்வது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்