2024-இல் சென்னையில் மீண்டும் சுனாமியா? - திகில் கிளப்பும் அனுமோகன்.. எதுக்கு இப்படி?
கிழக்கு பக்கம் பார்த்தால் நம்முடைய தேனாம்பேட்டை சிக்னல் வரை கடல் இருந்திருக்கிறது. மேற்கு பக்கம் கடல் பொங்கியது கிழக்கு பக்கம் இருக்கும் கடல் உள்வாங்கியது
சென்னையில் தேனாம்பேட்டை சிக்னல் வரை மெரினா கடல் இருந்ததாகவும், அதன் பின்னால் என்ன நடந்தது என்ன என்பதையும் நடிகரும், இயக்குநருமான அனுமோகன் பேசியுள்ளார்.
1990களின் காலகட்டங்களில் இயக்குநர், நடிகர் என ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமானவர் அனுமோகன். படையப்பா படத்தில் ரஜினியிடம் பாம்பு புத்துக்குள் கைவிட்டு எப்படின்னா பாம்பு எடுத்தீங்க என கொங்கு ஸ்டைலில் இவர் பேசும் வசனம் மிகவும் பிரபலம். அன்றைய முன்னணி நடிகர்களின் அத்தனை பேரின் படங்களிலும் நடித்த அனுமோகன் தற்போது யூட்யூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
அதில் பேசிய அனுமோகன், “சித்தர் ஏட்டில் அரபிக்கடல், இந்திய பெருங்கடல், வங்கக்கடல் ஆகிய 3 இணைந்து பொங்குவதால் ராவணன் நாடு (இலங்கை) நீரில் மூழ்கும் என உள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி சுனாமி வந்தது. அப்போது மேற்கு பக்கம் இருக்கும் கேரளா கடற்கரையில் அலைகள் பொங்கியது. அந்த அலைகள் எல்லாம் நிலப்பரப்பை அழித்து கடலின் எல்லையாக மாற்றிக்கொண்டது. அதேசமயம் கிழக்கு பக்கம் பார்த்தால் நம்முடைய தேனாம்பேட்டை சிக்னல் வரை கடல் இருந்திருக்கிறது. மேற்கு பக்கம் கடல் பொங்கியது கிழக்கு பக்கம் இருக்கும் கடல் உள்வாங்கியது தான் இன்றைக்கு இருக்கும் மெரினா கடற்கரை. சித்தர் ஏட்டில் 2024 டிசம்பர் முடிவதற்குள் மீண்டும் அலையம்மன் தோன்றுவார். தேனாம்பேட்டை சிக்னலில் ஆலையம்மன் என்ற கோயில் இருக்கிறது. அதன் உண்மையான பெயர் அலையம்மன். மீனவர்கள் சேர்ந்து தான் இந்த கோயிலை கட்டினார்கள்.
அது மருவி தான் ஆலையம்மன் கோயிலாக மாறியது. சித்தர் ஏட்டில் சொன்னது மாதிரி நடக்கும். கடல் மீண்டும் பொங்கினால் நானும் இறந்து விடுவேன் என்றால் நடக்கத்தான் செய்யும். அதுதான் விதி. நான் அதற்காக எல்லாம் பயப்படவில்லை. எந்த ஒரு பேரழிவு என்றாலும் உயிரிழப்பு இருக்கக்கூடாது என்று தான் வேண்டிக் கொள்கிறேன். இதற்கெல்லாம் பரிகாரம் என்னவென்று கேட்டால் நீங்கள் எந்த கடவுளை வேண்டிக் கொண்டாலும் 5 நிமிடம் பஞ்ச பூதங்களையும் நினைத்து வணங்க வேண்டும். அதேபோல் சுயநலம் போய் பொதுநலம் வேண்டும். நாம் நடந்து கொள்வது தான் அதற்கான பரிகாரம் என அனுமோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Anu Mohan: 2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்