Samuthirakani: படம் ரிலீசுக்காக விஷால் போல் லஞ்சம் கொடுத்த சமுத்திரகனி - எந்த படத்திற்கு தெரியுமா?
திரைப்பட ரிலீசுக்காக விஷாலைப் போல தானும் லஞ்சம் கொடுத்ததாக நடிகர், இயக்குனர் சமுத்திரகனி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
![Samuthirakani: படம் ரிலீசுக்காக விஷால் போல் லஞ்சம் கொடுத்த சமுத்திரகனி - எந்த படத்திற்கு தெரியுமா? Actor and Director samuthirakani speak about tamil censor board curruption Samuthirakani: படம் ரிலீசுக்காக விஷால் போல் லஞ்சம் கொடுத்த சமுத்திரகனி - எந்த படத்திற்கு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/834ac4509169fa6274e9af05f69d771c1696070685918333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஷாலை தொடர்ந்து அப்பா படத்துக்கு வரிவிலக்கு சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்ததாக நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
சென்சார் போர்டுக்கு லஞ்சம்:
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இந்தியில் திரையிட மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதற்கான வங்கி கணக்கு பரிவர்த்தனை மற்றும் ஆடியோ ஆதாரங்களை விஷால் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாகவும் விஷால் பேசியிருந்தார்.
விஷால் வீடியோ வெளியானதை தொடந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் பதிலளித்தது. டிவிட்டர் பதிவில், விஷாலின் புகார் துரதிர்ஷ்டவசமானது என்றதுடன், ஊழல் தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் விசாரிப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு விஷால் நன்றி தெரிவித்தார்.
லஞ்சம் கொடுத்த சமுத்திரகனி:
சென்சார் போர்டின் மீது விஷால் அளித்த புகாரும், அதற்கு அதிரடியாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையும் இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தானும் லஞ்சம் கொடுத்ததாக கூறி ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் பேசிய சமுத்திரக்கனி, தனது தயாரிப்பில் திரைக்கு வந்த அப்பா படத்திற்கு வரிவிலக்கு பெற அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாக கூறியுள்ளார். அப்பா போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை எடுத்தும், அதற்கு வரிவிலக்கு பெற லஞ்சம் கொடுத்தது வருத்தம் அளிப்பதாகவும் சமுத்திரக்கனி பேசினார். விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனியும் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளது தமிழ் சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம், விசாரணை, சாட்டை, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் திரைபபடங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
இவர் கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடித்திருக்கும் ப்ரோ என்ற படத்தை இயக்கி இருந்தார். கடந்த ஜூலை மாதம் வினோதய சித்தம் படத்தின் ரீமேக்காக இந்த படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரு.மாணிக்கம் என்ற படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: Hitler Movie FirstLook: இனி விஜய் ஆண்டனியின் ராஜ்ஜியம் தான்.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் 'ஹிட்லர்' ஃபர்ஸ்ட் லுக்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)