மேலும் அறிய

Bigg boss 7 Tamil: கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!

Bigg boss 7 tamil contestants : நாளை தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7 இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்... கன்பார்ம் லிஸ்ட் லிஸ்ட் இதோ!

பிக் பாஸ் சீசன் 7 நாளை விஜய் டிவியில் கொண்டாட்டமாகத் தொடங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் டை ஹார்ட் ஃபேன்ஸ் இந்த நிகழ்ச்சி நாளை தொடங்கப் போகிறது என்றாலும்,போட்டியாளர்கள் யார் யார் என முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த முறை இரண்டு வீடு என்பதே அவர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்து வருகிறது. தற்போது உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்:

கூல் சுரேஷ் :

எந்த சினிமா ரிலீசானாலும் விமர்சனம் சொல்ல வித்தியாசமான முறையில் திரையரங்குக்கு வந்து சர்ச்சையில் சிக்கும் கூல் சுரேஷ் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளராக என்ட்ரி கொடுக்க உள்ளதாகத் தகவல். அப்படி என்றால் வீடு ஒரே கலகலப்பாக கன்டென்ட்டுக்கு பஞ்சம் இல்லாமல் ஸ்வாரஸ்யமாக இருக்கும்!

Bigg boss 7 Tamil: கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!

ஆயிஷா:

பிக் பாஸ் அமீரை வளர்த்த முஸ்லீம் குடும்பமான அஷ்ரப் - ஷியாஜி தம்பதியினரின் மகள் ஆயிஷா இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக என்ட்ரி கொடுக்கிறார் எனக் கூறப்படுகிறது. இதனால் அமீர் - பாவ்னி ஃபேன்ஸ் செம்ம குஷி!

பவா செல்லத்துரை:

இதுவரையில் பாடகர்கள், நடனக் கலைஞர்கள், கவிஞர்கள், நகைச்சுவை நடிகர்கள், மாடல்கள், சின்னத்திரை நடிகர்கள் என பலர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக வந்துள்ளனர். ஆனால் முதல்முறையாக ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் கதை சொல்லியான பவா செல்லதுரை பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவராக என்ட்ரி கொடுக்க உள்ளதாகத் தகவல்.

நிவிஷா:

சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நிவிஷா. இவர் சோசியல் மீடியாவிலும் பல ரசிகர்களைக் கொண்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிவிஷா பிக் பாஸில் என்ட்ரி கொடுப்பதாகத் தகவல்.

சரவண விக்ரம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைக்குட்டி கண்ணன் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தாலும் இங்கே பாண்டியன் ஸ்டோர்ஸைக் குடும்பத்தை வரவழைக்க விஜய் டிவி திட்டம் போட்டிருக்குமோ?

Bigg boss 7 Tamil: கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!

விஷ்ணு:

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகர் விஷ்ணு. ஆபீஸ், சத்யா உள்ளிட்ட தொடர்கள் மூலம் பரிச்சயமான விஷ்ணு பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளதாகத் தகவல்.

அனன்யா ராவ் :

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக மாறிய பாலாஜி முருகதாஸ் ஃபேமிலி ஃப்ரண்ட் என சொல்லப்படும் அனன்யா ராவ்  பிக் பாஸ் வீட்டுக்குள் வர உள்ளதாகத் தகவல்.

நிக்‌ஷன்:

இளம் பாடலாசிரியர் எனக் கூறப்படும் நிக்‌ஷன் இந்த பிக் பாஸ் சீசனில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இவர் ஒரு நடுத்தர குடும்பத்தின் பின்னணியை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

யுகேந்திரன்:

பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் ஒரு பின்னணி பாடகராக ஏராளமான பாடல்களை பாடி இருந்தாலும் வில்லன் நடிகராகவும் கலக்கி உள்ளார். யுகந்திரன் பிக் பாஸூக்கு வருகை தந்தால் அது நிச்சயம் அவருக்கு கம்பேக்காக அமையும்.

அக்ஷயா உதயகுமார்:

 ‘லவ் டுடே; படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக ஒரு சில காட்சிகளில்  தோன்றிய அக்ஷயாவும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவராக எண்ட்ரி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அப்போ பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் வோட்டு மழையை நிச்சயம் பொழிவார்கள்!

நடிகை விசித்ரா:

ஒரு காலகட்டத்தில் டான்ஸர், குணச்சித்திர நடிகை எனக் கலக்கிய விசித்ரா, சில காலமாக படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். சமீபத்தில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த விசித்ரா, குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையை வெளிப்படுத்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதைத் தொடர்ந்து  தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்!

வினுஷா:

டிக் டாக் செய்த வினுஷாவுக்கு லக் அடித்தது மிகவும் பிரபலமான சீரியலான 'பாரதி கண்ணம்மா' சீரியலில். கண்ணம்மாவாக இடையில் என்ட்ரி கொடுத்த இவருக்கு தற்போது பிக் பாஸ் வாய்ப்பும் கதைவைத் தட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அருமையான எதிர்காலத்தை பெற்றுத் தரும் என்ற கனவுகளுடன் இந்த சீசனில் உள்ளே நுழைகிறார் வினுஷா.

மூன் நிலா:

யூ டியூப், சோஷியல் மீடியாவில் பரிச்சயமானவராக் வலம் வரும் மூன் நிலா மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண். ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அந்தப் பிரிவில் இந்த சீசனில் நுழைகிறார் மூன் நிலா.

ரவீனா தாஹா:

ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள ரவீனாவுக்கு நல்ல ஒரு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மௌன ராகம் சீசன் 2' சீரியல். வெகுளித்தனமான தனது சுட்டி தனத்தால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக கடி ஜோக் சொல்லி பிரபலமான ரவீனா, இந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக எண்ட்ரி கொடுப்பதாகத் தகவல்.

இவர்கள் அனைவரும் உறுதியான போட்டியாளர்கள் என கூறப்படும் நிலையில் மேலும் சிலர் இறுதிக்கட்ட லிஸ்டில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. அந்த பட்டியலில் தர்ஷா குப்தா, ரக்ஷன், நடன இயக்குநர் ஸ்ரீதர், நடிகர் பப்ளு  உள்ளிட்ட சிலரும் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
Embed widget