சீனியர் நடிகர் மாதிரி நடந்து கொள்ளுங்கள்..சர்ச்சை பதிவிட்டு மரண அடி வாங்கும் அமிதாப் பச்சன்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்த் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடம் எதிர்ப்பை சந்தித்து வருகிறது

உலகை உலுக்கிய பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய திரை பிரபலங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்கல் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் . இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடம் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
அமிதாப் பச்சனின் சர்ச்சை பதிவு
தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவுட்டு வருபவர் அமிதாப் பச்சன். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் தனது எக்ஸ் தளத்தில் அமிதாம் பச்சன் பதிவிட்டார். இந்த பதிவில் அவர் " பதிவு 5356 " என குறிப்பிட்டு எதுவும் எழுதாமல் விட்டுள்ளார்" இவ்வளவு கோரமான தாக்குதல் நடந்துள்ள நிலையில் அமிதாப் பச்சன் ட்வீட் செய்து விளையாடிக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். ' திரைத்துறையைச் சேர்ந்த சீனியர் நடிகர் நீங்கள் ஆனாலும் காஷ்மீரில் நடந்ததைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை' என இந்த பதிவில் கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் வெளிப்ப்படையாக பேச வேண்டும் ' என்று பலர் அவரை வலியுறுத்தி வருகிறார்கள்.
T 5356 -
— Amitabh Bachchan (@SrBachchan) April 22, 2025
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் , ஜான்வி கபூர் , சஞ்சய் தத் , சோனு சூட் உள்ளிட்ட பலர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

