காடுகளுக்கு செல்ல திட்டமா? இந்த இடத்தை லிஸ்ட்டில் சேருங்க!

Published by: ஜான்சி ராணி

தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேக்கடி மர வீடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இடம் தான் மூணார். கேரளாவில் பார்க்க வேண்டிய அழகான இடம்.

சீயப்பாரா மற்றும் வாலாரா போன்ற நீர்வீழ்ச்சிகள் வழியாக மூணாறுக்குச் செல்லும் பாதை உள்ளது. கடைசி 30 கி.மீ. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் மிகவும் அழகிய பயணமாகும்.

அரிய வகை மலை ஆடுகளான நீலகிரி தஹ்ர்ஸ்  போன்ற விலங்குகளை பார்க்க. மூணாறில் உள்ள ராஜமலை அல்லது இரவிகுளம் தேசிய பூங்கா அனைவரும் விரும்பும் இடமாக இருக்கும்.

எக்கோ பாயிண்ட், அட்டுக்காடு நீர்வீழ்ச்சி , லாக்ஹார்ட் கேப் மற்றும் மாட்டுப்பட்டி அணை ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

மூணாற்றிலிருந்து திரும்பும் சுற்றுலா பயணிகள் தேக்கடியில் உள்ள ட்ரீஹவுஸில் தங்கலாம். பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் 8 ஏக்கர் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள ஒரு ட்ரீஹவுஸ் தேக்கடியில் வனப்பகுதியில் உள்ளது.

காடுகள் பிடிக்கும் என்பவர்களுக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும். இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

தேக்கடி ஏரிக்கரையிலிருந்து மலையேற்றம் சென்று வரலாம்.

நடந்து செல்லும் போது ஏரியின் எல்லைகளில் யானைகள் மற்றும் மான்களையும் பார்க்கலாம். 

கேரளாவில் மூணாறு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேக்கடி மர வீடு ஆகியவற்றை குடும்பத்துடன் சென்று காணலாம்.