AK 64: ரெட் டிராகன் இஸ் பேக்... அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் செம ட்ரீட் - வரப்போது AK 64 அப்டேட்!
அஜித்குமாரின் அடுத்த படமான ஏகே 64 படத்தின் முக்கிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி படம் உருவானது. அதன்பின்பு, அஜித் கார் ரேஸிங்கில் முழுவீச்சில் பங்கேற்று வருகிறார். அதேசமயம் அஜித் அடுத்தடுத்து படம் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏகே 64:
அஜித் கடந்த சில மாதங்களாகவே ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது அடுத்த படம் எப்போது? என்று ரசிகர்கள் காத்துள்ளனர். அஜித்தின் அடுத்த படத்தை அவரது குட் பேட் அக்லி படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.
அடுத்த வாரம்:
இந்த படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்று அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பொதுவாக தன்னுடைய ஒவ்வொரு படத்தின் தொடக்கத்திற்கு முன்பே திருப்பதி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அஜித்குமார் இன்று அதிகாலையிலே திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்து முடித்தார்.
இந்த படத்தின் தலைப்பு அல்லது படத்தின் இதர தொழில்நுட்ப குழு உள்ளிட்டவர்கள் பற்றிய ஏதேனும் ஒரு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அவரே மேடையில் கூறியிருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
குட் பேட் அக்லி படம் ரூபாய் 200 கோடியை வசூலில் ஈட்டியிருந்தாலும், அந்த படம் அஜித் ரசிகர்களுக்கான படமாகவே இருந்ததாக ஒரு தரப்பினர் விமர்சனம் முன்வைத்தனர். இதனால், இந்த படத்தை அனைத்து தரப்பினருக்குமான படமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் கடந்த கால ப்ளாக்பஸ்டர் படங்களில் இருந்தே குட் பேட் அக்லி படம் உருவாகியிருந்தது. மீண்டும் அதுபோன்று எடுத்தால் அது ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தாது என்பதால் மார்க் ஆண்டனி போன்ற ஒரு படத்தை இயக்கவே ஆதிக் முயற்சிப்பார் என்று கருதப்படுகிறது.
சம்பளம்:
ஆதிக்கின் வழக்கமான மசாலா படமாக இந்த படமும் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கான மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக அஜித் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் அஜித் இருப்பதால் அவரது புதிய தோற்றம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















