Thunivu Song Leaked: அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..இணையத்தில் லீக்கான துணிவு பட பாடல்..!
வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் அதற்குள் இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
View this post on Instagram
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. முன்னதாக வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்தது. 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் பாடலாக சில்லா சில்லா வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சில தினங்களுக்கு முன் படக்குழு அறிவித்தது.
https://t.co/b6QxWCvhZq #ChillaChillaSong
— Harsha Appu (@HarshaA08949471) December 7, 2022
இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்த இப்பாடலை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் நேற்றைய தினம் இதன் 10 விநாடி பாடல் வரிகள் இணையத்தில் வெளியாகி படக்குழு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரசிகர்கள் இந்த வீடியோக்களை பகிர வேண்டாம் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எப்படி சில்லா சில்லா பாடல் இணையத்தில் கசிந்தது என்பது குறித்து படக்குழு விசாரணையில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
அந்த 10 விநாடி பாடல் வரிகளும் தெளிவாக இல்லாத நிலையில், அஜித்தின் வேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடலைப் போல் இருப்பதாகவும், கண்டிப்பாக இப்பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.