Ajith : குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் அஜித்.. மனுஷன் கோட் சூட்டில் கெத்து காட்டுறாப்ல
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
அஜித்
நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரசன்னா இப்படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த மே மாதம் ஹைதராபாதில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதுவரை இல்லாத புது லுக்கில் அஜித் தோற்றமளிக்கிறார். ஏற்கனவே அவரது புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
A stunning looking #AjithKumar from the shoot of #GoodBadUgly in Madrid ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) October 10, 2024
VERA LEVEL entertainment on the big screens for Pongal 2025 🔥
@MythriOfficial @Adhikravi @suneeltollywood @AbinandhanR @ThisIsDSP @editorvijay @GoodBadUglyoffl @SureshChandraa… pic.twitter.com/5ZuKSKW87b
குட் பேட் அக்லி படத்தில் லுக் அஜித்தின் மங்காத்தா பட லுக்கை போலவே இருப்பதாகவும் அப்படத்தைப் போலவே இப்படத்தில் அஜித்தை நெகட்டிவ் ரோலில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.