நீங்க எப்ப வாழப் போறீங்க...ரசிகர்களுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்
அஜித் வாழ்க , விஜய் வாழ்க என சொல்லும் ரசிகர்கள் நீங்க எப்போ வாழப்போறீங்க என நடிகர் அஜித் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்

அஜித் குமார்
விடாமுயற்சி படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. தற்போது துபாயில் நடைபெற்று வரும் 24H மிச்லின் கார் பந்தையத்தை அஜித் மற்றும் அவரது குழு கலந்துகொண்டுள்ளார்கள். இதனால் அஜித் ரசிகர்களின் மொத்த கவனமும் இந்த கார் பந்தையத்தை நோக்கி திரும்பியுள்ளது. நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் துபாய் சென்று இந்த போட்டியை கண்டு ஆரவாரம் செய்தார்கள். மேலும் பல வருடங்கள் கழித்து அஜித் பேட்டிகளில் கலந்து பேசி வருகிறார்.
"இவ்வளவு கூட்டம் இங்கு வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தன்னுடைய ரசிகர்களை தான் அளவுகடந்து நேசிப்பதாகவும் அஜித் தெரிவித்தார். மேலும் களத்திற்கு தன்னைப் பார்க்க வந்திருக்கும் ரசிகர்களுக்கு கையசைத்தும் அவர்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டார்.
மேலும் தனது ரசிகர்களுக்கு சில அறிவுறைகளை கூறி வீடியோ ஒன்றும் வெளியிட்டார் அஜித். இந்த வீடியோவில் அஜித் " ரநிறைய ரசிகர்கள் இங்கு வந்திருப்பது ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான் . நீங்க எல்லாரும் சந்தோஷமா மன நிம்மதியுடன் வாழனும்னு கடவுள வேண்டிக்கிறேன். உங்கள் குடும்பத்தை பாருங்கள். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. நல்லா படியுங்கள். வேலைக்கு போகிறவர்கள் கடுமையாக உழைக்கனும். நமக்கு புடிச்ச விஷயங்களை செய்யும் போது அதில் வெற்றி அடைந்தால் சந்தோஷம் தான் ஆனால் தோல்வி அடைந்தால் சோர்ந்து போகாதீர்கள். விளையாட்டு தான் முக்கியம். விட்டுக் கொடுக்காமல் விடாப்பிடியாக முயற்சி செய்யுங்கள். லவ் யூ ஆல். " என அஜித் உணர்ச்சிவசமாக பேசியிருந்தார்.
நீங்க எப்போ வாழ போறீங்க
தற்போது மற்றொரு பேட்டியில் அஜித் " அஜித் வாழ்க விஜய் வாழ்கனு சொன்னது போதும் நீங்க எப்போ வாழப்போறீங்க. எனக்கு நீங்க கொடுக்கும் அன்பிற்கு நான் எப்போதும் நன்றிகடன் பட்டிருக்கிறேன். ஆனால் ப்ளீஸ் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய ரசிகர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால் நான் மகிழ்ச்சியடைவேன். என்னுடைய சக நடிகர்களை மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். லைஃப் ரொம்ப சின்னது. நம் பேரன் பேத்திகள் எல்லாம் நம்மை நியாபகம் வைத்துக் கொள்ளப் போவதில்லை. இன்றைக்காக வாழுங்கள்.' என அஜித் தெரிவித்துள்ளார்.
Ketaare oru kelvi 🤐🥲❤️#AjithKumar pic.twitter.com/ZqnzzdjsrP
— Trollywood 𝕏 (@TrollywoodX) January 13, 2025





















