மேலும் அறிய

DMK Congress Alliance:28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக

DMK Congress Alliance : கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினோடு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. எனவே கூட்டணி, தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மநீக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது புதிதாக தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் இணைந்துள்ளது. எனவே கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட இந்த முறை குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் தான் திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் தர வேண்டும் முழக்கத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பியது. ஆனால் திமுக தரப்பு இதனை ஏற்றுக்கொள்ளாததால் தவெகவுடன் கூட்டணி அமைப்போம் என திமுகவை மிரட்டியது. ஒரு கட்டத்தில் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். மேலும் திமுக அரசை விமர்சித்தும், தவெகவிற்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். 

காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதி.?

இதனால் திமுக தலைமை அதிருப்தி அடைந்து காங்கிரஸ் கட்சி இல்லாத கூட்டணியை உருவாக்க திட்டமிட்டது. இதற்கு ஏற்ப தேமுதிகவை இழுத்து காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்தது. இருந்த போதும் திரைமறைவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் எனவும் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் இதனை ஏற்றக்கொள்ளாத காங்கிரஸ் 39 தொகுதிகளை தந்தால் தான் கூட்டணி தொடரும் என தெரிவித்தது. இதனையடுத்து ராஜ்யசபா சீட்டிற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 5ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் கூட்டணி தொடர்பான முடிவை இன்று மாலைக்குள் அறிவிக்க திமுக வலியுறுத்தி வருகிறது. நாளைய தினம் ராஜ்யசபா வேட்பாளர்களின் பெயரை திமுக அறிவிக்கவுள்ளது. இந்தநிலையில் தான் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவுறுத்தலின் பேரில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 39 தொகுதிகளை கேட்டுவந்த காங்கிரஸ் கட்சிக்கு 36 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

நாளை வரை காங்கிரஸ் கட்சிக்கு கெடு

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினோ அதிகபட்சமாக 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுவும் இன்று மாலைக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டதன் பேரில் நளை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நாளை மாலைக்குள் கூட்டணி தொடர்பாக முடிவை அறிவிக்கவில்லையென்றால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட இருந்த ராஜ்யசபா சீட்டை திமுகவினருக்கே வழங்கப்படும் எனவும் கூறப்புடுகிறது. அந்த வகையில், திமுக சார்பாக 3 ராஜ்யசபா வேட்பாளர்கள் பெயரையும் கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் தொடர்பாக அறிவிப்பை வெளியிட திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
Vijay Decision : ‘பாஜக கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ என்ன முடிவு எடுக்கப்போகிறார் விஜய்..?
‘கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ விஜயின் முடிவு என்ன?
உணவகங்கள் மூடப்பட்டால் சமூகப் பேரழிவு ஏற்படும்! - வளைகுடாப் போர் சூழலால் முடங்கும் தமிழகம்; அன்புமணி எச்சரிக்கை!
உணவகங்கள் மூடப்பட்டால் சமூகப் பேரழிவு ஏற்படும்! - வளைகுடாப் போர் சூழலால் முடங்கும் தமிழகம்; அன்புமணி எச்சரிக்கை!
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்: பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி!
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்: பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget