Watch Video : ரசிகரின் செயலால் கடும் கோபத்தில் அஜித்...வைரலாகும் வீடியோ
Ajith Kumar Angry : ரசிகர் ஒருவரின் செயலால் நடிகர் அஜித் குமார் கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் அஜித் குமார் தற்போது ஐரோப்பிய GT4 கார் பந்தையத்தில் போட்டியிட்டு வருகிறார். நவம்பர் மாதம் முதல் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்புகளையும் தொடங்க இருக்கிறார். ரேஸிங் களத்தில் அஜித்தை காண பல்வேறு ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் ஒருவரின் செயலால் அஜித் கோபப்பட்டு ரியாக்ட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
விசிலடித்த ரசிகர்கள் , கோபப்பட்ட அஜித்
தன்னை காண வந்த ரசிகர்களுக்கு அஜித் கைகாட்டினார். அப்போது ரசிகர் ஒருவர் அங்கிருந்த அமைதியை குலைக்கும்படி சத்தமாக விசிலடித்தார். உடனே அஜித் குமார் அந்த நபரை கண்டித்து தனது முகத்தை கடுமையாக மாற்றினார் .
That Angry look of #Ajithkumar when a Fan of him whistled at the spot of Racing🤫🫡pic.twitter.com/epPJBmijsJ
— AmuthaBharathi (@CinemaWithAB) October 13, 2025





















