Ajith: எப்படி அஜித் உங்களால இதை செய்ய முடியுது? - அமீர்கான் கேள்வியால் ஆடிப்போன ரசிகர்கள்..
“லால் சிங் சத்தா” பட புரொமோஷனுக்காக ஆமீர்கான் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினுடன் கலந்து கொண்டார்.
பிரபல இந்தி நடிகரான ஆமீர்கான் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குறித்து பேசியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர்கான். கரீனா கபூர், ஷாரூக்கான், நாக சைதன்யா. மோனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சிங் சத்தா”. இந்த படத்தை ஆமீர்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படமானது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதே தேதியில் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள ரக்ஷா பந்தன் படமும் வெளியாகவுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் படத்தால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தை புரொமோட் செய்ய அக்ஷய் குமார், ஆமீர்கான் இருவரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் ஆமீர்கான் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினுடன் கலந்து கொண்டார்.
Actor #AamirKhan about #AjithKumar sir ❤️#3YearsOfNerkondaPaarvai #AK61 #AK pic.twitter.com/95UKQjo0QB
— Gowtham ᵛᵃˡᶤᵐᵃᶤ (@GowthamTAF) August 8, 2022
ஒரு ஃபேன் பாய் தருணமாக இப்படத்தை வெளியிடுகிறேன். இந்தி திணிப்பை எதிர்ப்பது தான் திமுகவின் கொள்கை தானே தவிர இந்தி படங்களை எதிர்ப்பது அல்ல எனவும் அப்போது உதயநிதி கூறினார். இதனைத் தொடர்ந்து இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஆமீர்கானிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்திடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன கேள்வி எழுப்புவீர்கள் என கேட்டார்.
அதற்கு அவர், நான் அஜித்தை பார்க்கும்போதெல்லாம் எங்கிருந்து அவருக்கு எனர்ஜி இருப்பதாக உணர்கிறேன். அது எப்படி வெளிப்படுகிறது என கேட்பேன் என ஆமீர்கான் கூறியுள்ளார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்