மேலும் அறிய

Watch Video: ஏ.ஆர்.ரஹ்மான் பாடலால் கன்ட்ரோலை இழந்த அமீர் கான்.. வைரலாகும் வீடியோ!

பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது மகள் ரியா கானின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அமிர் கான்

கடந்த 30 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து  வருபவர் அமீர்கான். பத்மபூஷன், பத்மஸ்ரீ,  ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துருக்கும் இவருக்கு, பாலிவுட் மட்டுமன்றி,  உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

தாரே ஸமீன் பர், லகான், பி.கே, டங்கல், 3 இடியட்ஸ் என பல முத்திரை பதிக்கும் படங்களை கொடுத்த பெருமையும் அமீர்கானுக்கு உண்டு. நடிப்பது மட்டுமன்றி, சமூகத்தில் நிகழும் அநீதிகளை தட்டிக் கேட்பது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பிரபலங்களுள் ஒருவர் அமீர்கான்.  மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறும், சத்யமேவ ஜெயதே எனும் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் சில வருடங்களுக்கு முன்னர் அமீர்கான் நடத்தி வந்தார். 

கோலாகலமாக 4 நாட்கள் நடந்த மகள் திருமணம்

சமீபத்தில் அமிர்கானின் மகள் இரா கானின் திருமணம் நடைபெற்றது. இரா கான் மற்றும் நுபுர் ஷிகாரே என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம்  நிச்சயம் செய்யப்பட்டது. திருமண நிச்சயம் ஆகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடந்து முடிந்தது.

மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மெஹந்தி, சங்கீத், பஜாமா பார்ட்டி என கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்கள். இதன் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றன, இப்படியான நிலையில் அமீர் கான் தனது மகளின் திருமணத்தில் நடனமாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரங் தே பசந்தி பாடல்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sahil (@djsahilmusic)

அனைவரும் திருமணத்தில் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்க அமீர் கானை ஆடவைக்க ஒரு டெக்னிக் பயன்படுத்தி இருக்கிறார் அங்கு இருந்த டி.ஜே. அமீர் கான் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான “ரங் தே பசந்தி” படத்தில் சக்கைப் போடு போட்ட பாடல் ‘மஸ்தி கி பாத்ஷாலா’ பாடலை ஒலிக்கவிட்டார்.

உடனே கன்ட்ரோலை இழந்து தன் போக்கில் அந்த பாடலுக்கு 18 வருஷம் முன்பு போட்ட அதே டான்ஸ் மூவ்ஸை அமீர் கான் ஆடத் தொடங்குகிறார். அவருடன் சேர்ந்து அனைவரும் அந்தப் பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர் நடித்து கயாமத் சே கயாமத் தக் என்கிற படத்தில் ஒரு பாடலை டி.ஜே ஒலிக்க உடனே அவரைச் சென்று கட்டிபிடித்துக் கொள்கிறார் ஆமிர்கான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!

Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Embed widget