Rajinikanth: சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர் ரஜினி.. சிறந்த மனிதர்.. புகழ்ந்து தள்ளிய கோபாலி!
நீ சம்பாதிப்பதை விட நிறைய தர்மம் பண்றன்னு எனக்குத் தெரியும்டா என கூறினேன். இதை யார் உங்களுக்கு சொன்னார்கள் என பதிலுக்கு கேட்டர். அதற்கு நான் உன்னை எனக்கு நல்லாவே தெரியும் என கூறினேன்.

ரஜினி மாதிரி சத்தியத்துக்கு கட்டுப்பட்ட நபரை பார்க்கவே முடியாது என சில தினங்களுக்கு முன் மறைந்த அவரது திரைப்பட கல்லூரி ஆசிரியர் கோபாலி தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த நேர்காணலில் பேசிய கோபாலி. “ரஜினிகாந்த் மாதிரி ஒரு நல்ல நடிகர், சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர் யாரும் கிடையாது. அவன் என் மாணவன் என்பதற்காக இந்த வார்த்தையை நான் சொல்லவில்லை. அவனுக்கு என்மேல எப்பவும் கொள்ளை ஆசை இருக்கும். நடக்கும்போது எனக்கு ரொம்ப கால் வலிக்கும். நானே ஓரிடத்தில் உட்காந்து பிடித்துக் கொண்டு இருப்பேன். கால் வலிக்கும்போது யோகா செய்தால் அது போகும் என்பதை சொல்லிக் கொடுத்த உலகின் முதல் ஆசிரியர் நான் தான்.
அப்படி இருக்கும்போது நான் கால் வலியில் இருந்தால் பிடித்து விடட்டுமா என ரஜினி கேட்பான். நீ பிடித்தால் காலையே பிச்சிகிட்டு போயிடுவியே என கூறுவேன். அப்புறம் நான் எப்படிடா நடக்குறது என நகைச்சுவையாக கூறுவேன். இல்ல சார் நான் பிடிச்சி விடுறேன் என ரஜினி சொல்லுவான். அப்படி வளர்ந்தவன் அவன். ரஜினியை ஒரு அடி அடித்தால் முகத்தை தூக்கி வைக்க மாட்டான். மறுகன்னத்தை காட்டி இங்கேயும் ஒரு அடி கொடுங்கள் சமமாகி விடும் என கூறுவான்.
அதேபோல் அப்பா எதுவும் வீட்டில் என்னை அடிச்சேன்னு உங்ககிட்ட சொன்னாரா என கேட்டு, அவர் சொல்வதை எல்லாம் காதில் வாங்காதீர்கள் என கூறுவான். நான் இருக்கும் இடத்திற்கு எப்போது வந்தாலும் வந்து பார்ப்பான், சாப்பிடுவான், எங்களோடு தான் இருப்பான். அவனை மாதிரி ஒரு நல்ல மனிதனைப் பார்க்கவே முடியாது.
ரஜினிகாந்திடம் நீ எவ்வளவுடா சம்பாதிக்கிற என கேட்டால், நீங்கள் கேட்பதைப் பார்த்தால் வருமான வரித்துறைக்கு தகவல் சொல்வீர்கள் போலயே என கேட்டு விட்டு என்ன பெறுகிறான் என்பதை சொன்னான். எனக்கே அதைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டு விட்டது.
அதேசமயம் நீ சம்பாதிப்பதை விட நிறைய தர்மம் பண்றன்னு எனக்குத் தெரியும்டா என கூறினேன். இதை யார் உங்களுக்கு சொன்னார்கள் என பதிலுக்கு கேட்டர். அதற்கு நான் உன்னை எனக்கு நல்லாவே தெரியும் என கூறினேன். மேலும் நீ இவ்வளவு தர்மம் பண்றீயே, நீ சாப்பிட்டால் மட்டும் சரியா என கேட்டேன். ஏழைகளுக்கு உணவளிக்க சொன்னேன். உடனே கண்டிப்பா போடுறேன் என சொல்லி தினமும் 750 பேருக்கு உணவளித்து கொண்டிருக்கின்றான்.
நான் கொண்டு வரும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு எனக்கு பிடித்த பக்கோடாவை வாங்கி வைத்து விடுவான். தான் இப்படி செய்தேன் என யாரிடமும் சொல்ல மாட்டான். அதேபோல் கோபாலி வீட்டுக்கு போனேன் என யாரிடம் கூற மாட்டான்” என தெரிவித்திருக்கிறார்.





















