மணி மணியான பாடல்களை பெற்ற மணிரத்னத்தின் டாப் 5 பாடல்கள் இதோ!

முதலில் மணிரத்னம்- இளையராஜா கூட்டணி பெரியளவில் ஹிட் பாடல்களை கொடுத்தது. அதன்பின்னர் மணிரத்னம் -ஏஆர் ரஹ்மான் கூட்டணி அதற்கும் ஒருபடி மேலேய் போய், தற்போதும் தொடர்ந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணி ரத்னம். இவருடைய படங்கள் பலரை பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும். அத்துடன் இவரது படத்தில் அமைந்துள்ள பாடல் காட்சிகளும் மிகவும் அற்புதமாக இருக்கும். முதலில் மணி ரத்னம்- இளையராஜா கூட்டணி பெரியளவில் ஹிட் பாடல்களை கொடுத்தது. அதன்பின்னர் மணி ரத்னம் -ஏஆர் ரஹ்மான் கூட்டணி அதற்கும் ஒருபடி மேலாக தற்போதும் தொடர்ந்து வருகிறது. இன்று இயக்குநர் மணி ரத்னம் தனது 65ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவருடைய படங்களில் இடம்பெற்ற சில அழகாக காட்சிப்படுத்தப்பட்ட பாடல்களை என்னென்ன?

1. சின்ன சின்ன வண்ண குயில்:

மணி ரத்னம் என்றால் நம் நினைவிற்கு முதலில் வரும் அவரது படங்களில் மௌன ராகம் ஒன்று. இந்தப் படத்தில் இளையராஜா இசை மற்றும் மோகன், ரேவதி ஆகியோரின் நடிப்பு படத்தை எங்கோ தூக்கி கொண்டு சென்று இருக்கும். இதில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதில் ஜானகி பாடிய சின்ன சின்ன வண்ண குயில் பாடல் மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

 2. சுந்தரி கண்ணால் ஒருசெய்தி:

இளையராஜா-மணி ரத்னம் கூட்டணியில் மற்றும் ஒரு சிறப்பான படம் என்றால் அது தளபதி தான். இந்தப் படத்தில் அமைந்துள்ள சுந்தரி கண்ணால் ஒரு செய்தி பாடல் எஸ்பிபி மற்றும் ஜானகி பாடியிருப்பார்கள். இப்பாடலில் வரும் காட்சிகள் ஒரு சிறிய கதை போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

 3. புது வெள்ளை மலை:

ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகவும் இயற்கை அழகு சூழந்த இமாலய மலைப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதேபோல் ரஹ்மான்- மணிரத்னம் கூட்டணி முதல் படம் இதுவாகும். இந்தப் படத்தில் இருக்கும் அத்தனை பாடல்களும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். 

 4. பச்சை நிறமே: 

ஏஆர்.ரஹ்மான் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் சிறப்பான பாடல்கள் அமைந்த மற்றொரு திரைப்படம் என்றால் அது அலைபாயுதே தான். இந்தப் படத்தில் பச்சை நிறமே பாடல் மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

 5. ஒரு தெய்வம் தந்த பூவே:

கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலில் ஒரு தாய்-மகள் பாசத்தை குறிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். அதில் வரும் கடல் காட்சிகள் மற்றும் இருக்கும் மட்டை வடிவ கப்பல் போன்றவை மிகவும் அழகாக இருக்கும். 

 இவை தவிர மணி ரத்னம் படங்களில் வான் வருவான், சாராட்டு வண்டியில என மேலும் பல பாடல்களை அடுக்கி கொண்டே போகலாம். 

Tags: ar rahman tamil cinema director Birthday ilayaraja songs mani ratnam Roja Visualization

தொடர்புடைய செய்திகள்

இரவுப் பொழுதை இனிமையாக்கும் ஸ்வர்ணலதாவின் தங்கக்குரல் பாடல்கள்!

இரவுப் பொழுதை இனிமையாக்கும் ஸ்வர்ணலதாவின் தங்கக்குரல் பாடல்கள்!

”The Family Man சீசன் 2, பொதுப்புத்தியின் வெளிப்பாடே” - சர்வதேச விருதுகள் பெற்ற குறும்பட இயக்குநரின் பதிவு..

”The Family Man சீசன் 2, பொதுப்புத்தியின் வெளிப்பாடே”  - சர்வதேச விருதுகள் பெற்ற குறும்பட இயக்குநரின் பதிவு..

Premam Movie: பிரேமம் கிளைமேக்ஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா? ரசிகரின் கேள்வியால் வெளிவந்த உண்மை !

Premam Movie: பிரேமம் கிளைமேக்ஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா? ரசிகரின் கேள்வியால் வெளிவந்த உண்மை !

”என்னைப்பற்றி கவலைப்படுவதை  மற்றவர்கள் நிறுத்துங்கள்” - வதந்திக்கு பதிலளித்தார் வனிதா

”என்னைப்பற்றி கவலைப்படுவதை  மற்றவர்கள் நிறுத்துங்கள்” - வதந்திக்கு பதிலளித்தார் வனிதா

400 குடும்பங்களுக்கு உதவிய ராணா : நெகிழ்ந்த பழங்குடிகள்..!

400 குடும்பங்களுக்கு உதவிய ராணா : நெகிழ்ந்த பழங்குடிகள்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !