Abpnadu Exclusive : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நோட் புக் அனுப்பிய நடிகர் விஜய்!... தளபதி கட்டளையை சாசனமென நிறைவேற்றிய நிர்வாகிகள்!
விஜயின் ரசிகர்கள் முதலில் விஜய் நற்பணி மன்றமாக ஆரம்பிக்க, நாளையடைவில் தங்களது தளபதியின் அன்பு கட்டளையின் படி, நற்பணி மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.
தமிழ் சினிமாவில் தன் கடின உழைப்பாலும், தன்னை புறக்கணித்தவர்கள் மத்தியில் மீண்டு, தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்திருக்கிறார் விஜய். 18 வயதில் சினிமா துறையில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய்க்கு பெரும் ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இவரின் ரசிகர்கள் முதலில் விஜய் நற்பணி மன்றமாக ஆரம்பிக்க, நாளையடைவில் தங்களது தளபதியின் அன்பு கட்டளையின் படி, நற்பணி மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்த இயக்கத்திற்கு என விஜய் புகைப்படம் பொறிக்கப்பட்ட தனிக்கொடி, தனி பெயர் உருவாக்கினர். தொடர்ந்து இந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு கட்ட நற்பணிகள் அவ்வபோது நடைபெற்று வருவது செய்திகளாக வெளிவருவது நாம் அனைவரும் அறிந்ததே.
அதேபோல், வாழ்க்கை மற்றும் சினிமாவில் எப்பொழுதும் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கும் நடிகர் விஜய். பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் அதற்கான குரலாகவும் இருந்து வருகிறார். உதாரணமாக, மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பீடு, காவேரி பிரச்சனைக்களுக்கு நேரடியாகவும், வீடியோ வாயிலாகவும் கருத்து தெரிவித்து வந்தார்.
தொடர்ந்து, சென்னையில் பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தபோது நிவாரணமும் வழங்கினார். தொடர்ச்சியாக தனது திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது அரசியல் கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற இருப்பதாகவும், வருகின்ற 2026 தமிழக சட்டபேரவை தேர்தலில் விஜய் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் விஜய், என்னை சந்திக்க வரும் நபர்கள் சால்வை கொண்டு வரவேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பள்ளி #மாணவ_மாணவிகள் பயன்பெறும் வகையில் #நோட்புக் வாங்கி வாருங்கள் என்று தெரிவிருந்தார்.
#தளபதி
— Dr Left Pandi (@leftpandi) June 14, 2022
என்னை சந்திக்க வரும் உறவுகளிடம் எனக்கு #சால்வை_வேண்டாம் அதற்கு பதிலாக பள்ளி #மாணவ_மாணவிகள் பயன்பெறும் வகையில் #நோட்புக் வாங்கி வாருங்கள் என்று
அவ்வாறு பெறப்பட்ட நோட்புக்குகள் இன்று அரசு பள்ளிகளில் பயிலும் #மாணவ_மாணவியர்க்கு வழங்கப்பட்டது@actorvijay @BussyAnand pic.twitter.com/XsELWnHpkf
அதன் அடிப்படையில் கடந்த இரு மாதங்கள் ஆண்டு விடுமுறை காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சேர்த்து வைத்த நோட் புத்தகங்களை நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, இயக்க நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட் மற்றும் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கி மொத்தம் 129 பேர் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அடுத்து வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கலாம் என்றும் எதிர்பார்க்க படுகிறது.