Laal Singh Chaddha Release Date: என்ன ஆனாலும் கே.ஜி.எஃப் கூட மோதுறது உறுதி.. அமிர்கான் படக்குழு எடுத்த அதிரடி முடிவு..
படம் நிச்சயமாக சொன்ன தேதியில் வெளியாகும் லால்சிங் சட்டா என படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. இந்தப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அமிர்கான், கரீனா கபூர் நடித்துள்ள இந்தப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன், அமீர்கானும் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி மொழிகளில் கே.ஜி.எஃப் படத்தை ஏப்ரல் 14 ஆம் வேளியிட திட்டமிட்டிருந்த கே.ஜி.எஃப் படக்குழுவினரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. காரணம் வட இந்தியாவில் அன்றைய தினம் கேஜிஎஃப் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்காது. இந்த நிலையில் இது குறித்து நடிகர் அமிர்கான் கே.ஜி.எஃப் படக்குழுவினருக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் ஒன்றை எழுதினார்.
இது குறித்து அவர் கூறியபோது, “லால்சிங் சட்டா படத்தை கே.ஜி.எப்.-2 வெளியாகும் நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை குறித்து கே.ஜி.எப்.-2 படத்தின் கதாநாயகன் யாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டேன். அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டார்கள் . கே.ஜி.எப். அதிரடியான சண்டை படம், எனது படம் காதல் கதையிலான குடும்ப படம். எனவே இரண்டையும் மக்கள் பார்ப்பார்கள். வசூல் பாதிக்கப்படாது ” என்றார்.
View this post on Instagram
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் லால்சிங் சட்டா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து அதனை மறுக்கும் விதமாக படக்குழு, படம் நிச்சயமாக சொன்ன தேதியில் வெளியாகும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
View this post on Instagram