1000 கோடி வசூலிக்குமா கஜினி 2..? ஓப்பனாக சவால்விட்ட ஆமீர் கான்
தமிழில் சூர்யாவும் இந்தியில் ஆமீர் கானும் நடித்து ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்ற கஜினி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

கஜினி
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கஜினி. அசில் , நயன்தாரா , ரியாஸ் கான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஹாலிவுட்டில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய மொமெண்டொ படத்தின் கதையைத் தழுவி உருவான இப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. தமிழைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இந்தியில் இப்படம் ரீமேக் ஆனது. தமிழில் நடித்த அசின் நாயகியாக தொடர ஆமீர் கான் நாயகனாக நடித்தார். தமிழைக் காட்டிலும் இந்தியில் வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்திய சினிமாவில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் கஜினி என்பது குறிப்பிடத் தக்கது.
கஜினி 2
சமீபத்தில் நடிகர் ஆமீர் கான் மற்றும் கஜினி படத்தின் இந்தி தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்தார். கஜினி படத்தின் படப்பிடிப்பின் போது இப்படம் நிச்சயம் இந்திய சினிமாவில் 100 கோடி வசூல் சாதனை படைக்கும் என ஆமீர் கான் சொன்னதாக அவர் தெரிவித்தார். அதேபோல் தற்போது ஆமீர் கான் கஜினி 2 படத்தில் நடித்தால் அது 1000 கோடி வசூலீட்டும் என்றும் அவர் சொன்னார்.
கஜினி 2 படம் பற்றி கேட்டபோது ஆமீர் கான் கஜினி 2 பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது நிச்சயமாக அதற்கான சாத்தியங்கள் இருந்தால் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
"In the middle of the film, Aamir challenged everyone on the sets that #Ghajini going to be the fastest 100cr film. For 1000cr, we should talk about #Ghajini2"- #AlluAravind #AamirKhan: There's a lot of talk about #Ghajini2 😃 pic.twitter.com/m1aCRq4dmC
— $@M (@SAMTHEBESTEST_) January 31, 2025
தற்போது ஆமீர் கான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் இரும்புக்கை மாயாவி படத்தில் ஆமீர் கான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

