இந்திய அரசியலமைப்பின் 112வது பிரிவின்படி, ஒவ்வொரு ஆண்டும் மக்களவையில் நிதி அமைச்சர் தான் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் சில தருணங்களில் முன்னாள் பிரதமர்கள் சிலர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
முதல் முறையாக, 1958-ல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அப்போது நிதி அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியை முந்த்ரா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியிலிருந்து தூக்கியதால் அந்த ஆண்டு பட்ஜெட் பிரதமரால் தாக்கல் செய்யப்பட்டது.
1978-ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் பதவியிலிருந்து விலகியதால், அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
1969-ல் மொரார்ஜி தேசாய் நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1970-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வி.பி.சிங் நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது, அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி 1987-88-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.