
Aadi purush: ரசிகர்களே... ஆதிபுருஷ் படத்தின் 2வது பாடல் எப்போது ரிலீஸ்..? எகிறவைக்கும் எதிர்பார்ப்பு..!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதிபுருஷ்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ராம் சியா ராம்..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் 29-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ராம் சியா ராம்..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆதிபுருஷ்:
ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம், மீண்டும் புதிய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகிறது.
இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும். திரைத்துறை சேனல்கள், இசை சேனல்கள், ஏனைய பொழுதுபோக்கு சேனல்கள், இதைத் தவிர்த்து இந்தியா முழுவதும் எழுபதிற்கும் மேற்பட்ட முன்னணி பண்பலை வானொலி நிலையங்கள், தேசிய செய்தி சேனல்கள், திறந்த வெளி விளம்பர பலகைகள், இசையை ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் தளங்கள், டிக்கெட் பார்ட்னர்கள், திரையரங்குகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களிலும் மே 29 ஆம் தேதியன்று மதியம் 12 மணியளவில் ஒரே தருணத்தில் இந்தப் பாடல் வெளியாகிறது.
16-ந் தேதி ரிலீஸ்:
ஓம் ராவத் இயக்கியிருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
முன்னதாக ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலையைப் பார்த்து டென்ஷனாகி விட்டனர்.
கிராபிக்ஸ் காட்சிகள்:
டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை கார்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என கூறி கிண்டல் செய்தனர். இப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மோசமான விஎப்எக்ஸ் படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்துகளை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், ராமநவமி அன்று படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
அந்த போஸ்டரில், ராமராக பிரபாஸ், சீதாவாக கீர்த்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் இருந்தனர். இதனை அடுத்து புதிய போஸ்டர் வெளியானது. மும்பை சகினாக்கா காவல் நிலையத்தில் மும்பை ஐகோர்ட்டு வழக்கறிஞர்களான ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா மூலம் சஞ்சய் தினாநாத் திவாரி, இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி புகார் அளித்தனர். இது படக்குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

