மேலும் அறிய

A R Rahman: மழை இப்படி கெடுத்துடுச்சே.. புலம்பித் தள்ளும் ரசிகர்கள்... தேற்றி வரும் ஏ.ஆர்.ரஹ்மான்!

மழையால் கான்செர்ட் ரத்தான நிலையில், தனது ரசிகர்களின் ட்வீட்களுக்கு ரஹ்மான் பதில் அளித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் 30 ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு சென்னையில் லைவ் கான்செர்ட் இன்று நடைபெற இருந்தது. ”மறக்குமா நெஞ்சம்” என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கான்செர்ட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ள இருந்த நிலையில் கனமழை காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கர்  நாயகனின் 30 ஆண்டுகள்

1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி, பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக் கொள்ளும் அளவுக்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான்.

தற்போது 2023ஆம் ஆண்டில் திரையிசையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் ரஹ்மான். இந்தி, தமிழ் என கிட்டத்தட்ட 169 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘சின்ன சின்ன ஆசையில் 90-களின் குழந்தைகள் தொடங்கி ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என ஓங்கி ஒலித்து gen z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 இசைத் திருவிழா

A post shared by ARR (@arrahman)

Dear friends attending the Chennai concert tonight, I’m excited to see you all after so long! We request you to leave early and secure your seats early to have a memorable concert experience. #MarakkumaNenjam

— A.R.Rahman (@arrahman) August 12, 2023

ரஹ்மானின் 30 ஆண்டுகளை பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். முன்னதாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஹ்மான் இசையமைத்த 15 படங்கள் திரையிடப்பட்டன. தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறக்குமா நெஞ்சம் என்கிற பெயரில் இந்த நேரலை இசை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஏ.ஆர் ரஹ்மான் தவிர்த்து அவரது இசையில் பாடியுள்ள ஜோனிடா காந்தி, ஷக்தி ஸ்ரீகோபாலன் உள்ளிட்ட பாடகர்கள் கலந்துகொள்ள இருந்தார்கள். முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகர்கள் முன்னேற்பாடுகள் செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த ரஹ்மான்,  ரசிகர்கள் முன்னதாகவே நிகழ்ச்சிக்கு வந்து தங்களது இடங்களை பிடித்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்.

மனதில் நிலைத்திருக்கும் ஒரு அனுபவமாக இந்த கான்சர்ட் இருக்கும் என்று கூறியிருந்தார் ரஹ்மான். சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யா ராம் பேலேஸில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

புயலுக்கு முன் மழை

இந்நிலையில், ரஹ்மானின் இசையை கேட்க காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று சென்னையில் தொடர்மழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னை பனையூரில் நடக்கவிருந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது

 ரசிகருக்கு லவுயூ சொல்லி ஹார்ட் விட்ட ரஹ்மான்

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் ரஹ்மான். ரசிகர்களில் உடல்நலம் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்தார் அவர். இதற்கு ரசிகர் ஒருவர் “ நல்லவேள... இன்னும் வேளச்சேரிய தாண்டல... அப்டியே ரிடர்ன் கிளம்பிடலாம் என்று ட்வீட் செய்துள்ளார்.’ தனது ரசிகருக்கு மிக க்யூட்டாக உடைந்த இதயத்தையும், லவ் யூ என்று சொல்லியும் அவருக்கு ஹார்ட் விட்டு பதில் சொல்லியிருக்கிறார் ரஹ்மான்.

மேலும் இசை நிகழ்ச்சி ரத்தானது பற்றி வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வரும் ரசிகர்களைத் தேற்றி தொடர்ந்து பதில் ட்வீட்களை வழங்கி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget