Watch Video: கோடிகள் செலவு செய்து லோகேஷ் கனகராஜ் எடுத்த காட்சி... செல்ஃபோனில் ரீக்ரியேட் செய்து லைக்ஸ் அள்ளும் சிறுவர்கள்!
விக்ரம் படத்தின் மோகோபாட்டில் (Mocobot) உருவாக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றை தங்களது செல்ஃபோனில் எடுத்து மிரட்டியுள்ளனர் சில சிறுவர்கள்.
விக்ரம் படத்தின் இடைவேளைக்கு முன் வரும் சண்டைக் காட்சி, பல லட்சங்கள் செலவில் ‘மோகோபாட்’ எனும் கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த காட்சியின் மேக்கிங்கை படம் வந்தபோது ரசிகர்கள் பிரமித்துப் பார்த்தார்கள். தற்போது அதே காட்சியை வெறும் ஒரு செல்ஃபோனில் எடுத்து சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் சிறுவர்கள். இந்த சிறுவர்களின் செயலைப் பார்த்து இணையதளத்தில் அனைவரும் திகைத்து நிற்கிறார்கள்.
மோகோபாட்
அண்மைக் காலங்களில் திரைப்படத் தொழில்நுட்பங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு கருவி என்றால் மோகோபாட். ஒரு கருவியில் கேமரா பொருத்தப்பட்டு அந்தக் கேமரா எந்த எந்த திசையில் எந்த கோணத்தில் நகர வேண்டும் என்று முன்கூட்டியே குறிக்கப்பட்டு அதற்கேற்ப காட்சிகளை ஒருங்கிணைத்துக்கொள்ளும் வசதியை நமக்கு வழங்குகிறது.
விக்ரம்
விக்ரம் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கமலின் சண்டைக் காட்சி ஒன்றுக்கு மோகோபாட்டை பயன்படுத்தியிருந்தார். தற்போது மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் மோகோபாட் பயன்படுத்தப் பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் சினிமாவில் இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கவே செய்யும். நாம் வழக்கமாக பார்க்கும் சண்டைக்காட்சிகளை சுவாரஸ்யமான வகையில் அமைக்க இந்தத் தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக படத்தின் பட்ஜெட்டில் இருந்து தனியாக ஒரு தொகையும் ஒதுக்கப்படுகிறது.
எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்
என்னங்கடா Mocobot Camera வச்சு எடுத்த சீன இப்படி அசால்ட்டா Recreate பண்ணி வச்சுருக்கிங்க 👀🔥🔥🔥#vikram @Dir_Lokesh @girishganges 🎥 pic.twitter.com/Hmxyn4X4QI
— Madhan ツ (@itisMadhan_) July 18, 2023
— Madhan ツ (@itisMadhan_) July 18, 2023
இன்று செல்ஃபோனில் இளைஞர்கள் ஏதாவது ஒன்றை புதிதாத செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். மிகப்பெரியத் திரைப்படங்களில் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு உருவாக்கப்படும் காட்சிகளை தங்களது செல்ஃபோனில் அதே தரத்தில் இல்லையென்றாலும் ஓரளவுக்கு நெருங்கி விடுகிறார்கள்.
அதே மாதிரியான சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார்கள் இந்தச் சிறுவர்கள். விக்ரம் படத்தின் மோகோபாட் வைத்து எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியை தங்களது செல்ஃபோனில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரும் அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தக் காட்சியை எப்படி இந்த இளைஞர்கள் ஃபோனில் எடுத்தார்கள் என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
இதனுடன் இந்தக் காட்சியின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள் நம் பாய்ஸ். தொழில்நுட்பத்தில் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் திறமையும் ஆசையும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்!