Beat Songs | குத்துப்பாடல் கெத்து.. இந்த 5 நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளம் தெரியுமா? டாப் 5 பட்டியல்..
குத்து சாங், பீட் சாங் இப்படி என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்திய சினிமாவில் காலம்காலமாகவே இப்படியான பாடல்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு.
குத்துப் பாடலில் ஆட கெத்து சம்பளம் பெற்ற நடிகைகளின் பட்டியல் தான் இது. குத்து சாங், பீட் சாங் இப்படி என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்திய சினிமாவில் காலம்காலமாகவே இப்படியான பாடல்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு.
என்ன முன்பெல்லாம் இந்தப் பாடல்களுக்கு கிளாமர் கேர்ள், செக்ஸி கேர்ள் என்ற பெயரில் தனியாக நடிகைகள் வைத்திருப்பர். குறைந்த சம்பளத்தில் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். காலப்போக்கில் கிளாமர் நடனக் கலைஞர்கள் அதிகரித்தனர். சில்க், டிஸ்கோ சாந்தி, அனுராதா போன்ற நடிகைகள் இப்படியான குத்துப் பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டனர். சில்க் இதில் உச்சம் தொட்டார். அவரைப் பற்றி எழுதினால் அது தனிக்கதை.
இக்கால ஐட்டம் சாங்கில் மெயின் நடிகைகளே ஆடுகின்றனர். அப்போது அவர்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டால் நாம் மலைத்துப்போவோம். அப்படி அதிகப்படியான சம்பளம் வாங்கிய ஐந்து நடிகைகள் பற்றிய தொகுப்பு இது:
ஓ சொல்றியா மாமா..
நீங்கள் யூகித்தது சரிதான். இந்தப் பட்டியலில் முதலிடம் சமந்தாவுக்குத் தான். அண்மையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலில் சமந்தா ஆடியிருப்பார். இதற்காக அவர் பெற்ற சம்பளம் ரூ.5 கோடி. ஆனால் கொடுத்தாலும் செல்லும் என்றளவுக்கு அம்மணி பின்னிவிட்டார் அல்லவா?
லைலா ஓ லைலா:
சன்னி லியோன் ஆட்டத்தில் பழைய லைலா ஓ புதுப்பொலிவில் வெளியானது. இந்தப் பாடலில் ஆட சன்னி லியோன் ரூ.3 கோடி வாங்கியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாடலையும் பார்த்துவிடுங்கள்.
ஆவோ ராஜா..
சித்ரகடா சிங் ஆட்டத்தில் பாலிவுட்டில் அல்டிமேட் ஹிட் அடித்தப் பாடல்களில் ஒன்று ஆவோ ராஜா. இந்தப் பாடலில் ஆட அவருக்கு ரூ.60 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
குஸ் குஸ்..
நோரா ஃபதேஹி குஸ் குஸ் என்ற குத்துப் பாடலில் ஆட ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார். தில்பார், சகிசகி போன்ற படங்களிலும் அவர் சில குத்துப் பாடல்களில் ஆட கெத்துத் தொகை பெற்றுள்ளார்.
சிக்கினி சம்மேலி..
சிக்கினி சம்மேலி... இந்தப் பாடலை யாரும் மறக்க முடியாது. தனது உடலை வில்லாக வளைத்து வித்தை காட்டியிருப்பார் கத்ரீனா கைஃப். அந்தப் பாடலுக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ.50 லட்சம்.
;