2D Entertainment: சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு... !
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தில் தகுதியான ஆட்கள் தேவை என அந்நிறுவனம் சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையலகிள் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் சூர்யாவால் 2013 ஆம் ஆண்டு தொடங்கம்பட்ட தயாரிப்பு நிறுவனம் 2D Entertainment. சூர்யா-ஜோதிகாவின் இரு குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரின் முதல் எழுத்துக்களை கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. இந்நிறுவனத்தில் சூர்யாவின் குடும்பத்தினரும் நடிகர்களுமான கார்த்தி, ஜோதிகா ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர்.
2டி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பில் வெளியான படங்கள்:
2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிருவனம், முதன் முதலில் தயாரித்து வழங்கிய படம்,2015 ஆம் ஆணடில் வெளியான 36 வயதினிலே படத்தைத்தான். ஜோதிகா மிகப்பெரிய இடைவேளைக்கு பிறகு நடித்திருந்ததால், 36 வயதினிலே படத்தை சென்டிமென்டாக தயாரித்து வழங்கியிருந்தனர். படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதே ஆண்டில் இவர் அடுத்து வெளியிட்ட படம், பசங்க2. குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இப்படத்தில், சூர்யா-அமலா பால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஜோதிகா கம்-பேக் கொடுத்து நடித்த படங்களான மகளிர் மட்டும், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே ஆகிய படங்களை 2டி நிறுவனமே வெளியிட்டது. அது மட்டுமன்றி, நடிகர் சூர்யா 2020ஆம் ஆண்டில் நடித்திருந்த சூரரைப் போற்று மற்றும் கடந்த ஆண்டு பெரிதளவில் பேசப்பட்ட ஜெய் பீம் அகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸானாலும், விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. தற்போது, இந்நிறுவனத்தில் பணிபுரிய துணை இயக்குனர்கள் தேவைப்படுவதாக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
2டி நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு!
2டி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் துணை இயக்குனர்கள் வேண்டும் என ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2D நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பணிபுரிய ஆர்வமும் திறணும் கொண்ட துணை இயக்குனர் தேவை.
- குறைந்தது மூன்று திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள, ஆண்பெண் தேவை.
- நவம்பர் 15-ந்தேததிக்குள், TJGNANAVEL.TEAM@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தன்விவர முகவரியை அனுப்பவேண்டும்.
- உரிய பரிசீலணைக்கு பிறகு நேர்முக உரையாடலுக்கான அழைப்பு வரும்.
இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.