12 Years of Vinnaithaandi Varuvaayaa: 12 ஆண்டுகள் கடந்தது.... ‛மன்னிக்கப்பட்டாரா த்ரிஷா... காத்திருக்கும் கார்த்திக் நிலை என்ன?
90ஸ் மற்றும் 2கே இட்ஸ்க்கு ஒரு காதல் எக்ஸாம்பிள் என்றே கூறலாம். ஃபர்ஸ்ட் லவ் ஜெசி.அவ்வளவு ஈஸியாலாம் விட்டுவிட முடியாது! என்று கூறும்போது படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தன் முதல் காதலை நினைத்திருப்பர்.
காதல் திரைப்படங்களின் பட்டியலில் என்றுமே அழியா ஒரு இடத்தை பிடித்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா! 12 வருடங்களுக்கு முன்பு, 2010 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது இப்படம். சேரும் காதலை விட பிரிந்த காதலுக்கே திரையில் ரசிகர் கூட்டம் அதிகம் என்பதற்கு இப்படமும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த இப்படம், 90ஸ் மற்றும் 2கே இட்ஸ்க்கு ஒரு காதல் எக்ஸாம்பிள் என்றே கூறலாம். ஃபர்ஸ்ட் லவ் ஜெசி…அவ்வளவு ஈஸியாலாம் விட்டுவிட முடியாது! என்று கார்த்திக் கூறும் போது படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தன் முதல் காதலை நினைத்திருப்பர்.
ஜி வி எம்மின் ட்ரேட்மார்க் காட்சிகள் :
கௌதம் வாசுதேவ் மேனன் ஹீரோயின் கேரக்டர்களை எப்பொழுதும் ஒரு தெய்வீக தோற்றத்துடன் மிகைப்படுத்திய காட்டுவார். பெண் என்றால் இவள் தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் காட்சிப்படுத்துவார், கௌதம் வாசுதேவ் மேனன். அப்படி த்ரிஷா நடந்து வரும் ஒவ்வொரு காட்சிகளும் கார்த்திக் மனதில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களின் மனதையும் கவர்ந்து சென்றது என்றே கூறலாம். இந்த படத்தில் வரும் ஜெஸ்ஸி கேரக்டர் ஒவ்வொரு ஆணின் காதலியுடனும் ஏதோ ஒரு வகையில் ஒத்துப் போயிருக்கும். அதுதான் ஜெஸ்ஸி கேரக்டரின் ஹைலைட். அந்த அளவுக்கு அந்த கேரக்டரின் குணாதிசயங்களை அமைத்திருப்பார் இயக்குனர் கௌதம். கௌதமின் ட்ரேட்மார்க் சீனான, காதலன் காதலியின் பாதத்தை தொடும் காட்சிகள் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
படத்தின் ஹய்லைட்ஸ் :
மன்னிப்பாயா பாடல் வரிகளில் கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்காக கரை தாண்டி வந்தவள் தான் என்ற வரிகளில் தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி இருப்பார் ஜெஸ்ஸி. இருவருக்கும் ஏற்படும் சண்டைகள், அப்போது வரும் வசனங்கள் மிகவும் எதார்த்தமாக இருக்கும். கௌதம் வாசுதேவ் மேனன் நேர்காணல் ஒன்றில் சிம்புவும் த்ரிஷாவும் பேசும் வாசனங்கள் முன்கூட்டியே எழுதப்படவில்லை. சிச்சுவேஷனை மட்டும் சொல்லி எதார்த்தமாக பேசிய வசனங்கள் தான். அதனால் தான் என்னவோ பெரிய ஹிட் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். கார்த்திக்கின் வெறித்தனமான காதல், ஜெஸ்ஸியின் மனதை கரைய வைத்து, பின் அவருக்காக வீட்டை விட்டு வரும் தைரியத்தை ஏற்படுத்தியும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏற்படும் பிரிவு என்ற கதையின் ப்ளாட், பலரின் வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒத்து போயிருக்கும்.
அழியாத காதல் காவியம் !
திரிஷா, சிம்புவின் நடிப்பு இல்லாமல் ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு மதிப்பை கூட்டியுள்ளது எனலாம். மன்னிப்பாயா பாடலில் திருக்குறளை நடுவே வைத்தது, திரிஷா நம்ம பிரண்ட்ஸாக இருக்கலாம் என்று கூறும் பொழுது முஸ்தபா முஸ்தபா பாடலின் பிஜிஎம் இசைக்கப்படுவதெல்லாம் அவருக்கு மட்டுமே உண்டான தனிச்சிறப்பு. 12 வருடங்கள் கழித்தும் இப்படம் இன்றும் சென்னையில் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறதென்றால், படத்தின் வெற்றியைப் பற்றி நாம் பேசவே தேவை இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா விண்ணைத்தாண்டும் அளவிற்கு ஹிட் அடித்துவிட்டது.சினிமா வரலாற்றில் என்றும் அழியாத காதல் காவியமாக விண்ணைத்தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும்.