மேலும் அறிய
அர்ச்சனாவை வம்புக்கு இழுக்கும் சனம் ஷெட்டி!
ஓய்ந்த பாத்ரூம் டூர் பிரச்னையை மீண்டும் டுவிட்டரில் பதிவு செய்து அர்ச்சனாவை வம்புக்கு இழுத்துள்ளார் சக பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி.

சனம் ஷெட்டி
இந்தியாவில் எங்கே தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்.. பிக்பாஸ் சனம் ஷெட்டி
இந்தியாவில் எங்கு தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன் என்று நடிகை சனம் ஷெட்டி பொங்குவது யாரு தப்பு செஞ்சாலும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்று பிக்பாஸ் நிகழ்ச்சி தொனியிலேயே இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
2012-ம் ஆண்டு வெளியான அம்புலி படம் தான் சனம் ஷெட்டிக்கு ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த திரைப்படம். ஆனால், அவரோ அவ்வப்போது சமூக வலைதளங்களில் ட்வீட் என்ற பெயரில் வைல்டு ஃபயரை கொளுத்திப் போட்டுவிடுகிறார். அதற்கு வாங்கிக் கட்டிக்கொண்டும், வரிந்து கட்டி வருவதாகவும் கொரோனா ஊரடங்கு காலத்தைக் கடக்கிறார் என்றும் சொல்லலாம்.
அண்மையில், தமிழக அரசியல் பற்றி ட்வீட் செய்திருந்தார். அதில் மக்கள் நீதி மய்யக் கட்சியை விமர்சித்திருந்தார். ‘தற்போது, அவர் பிக்பாஸ் போட்டியாளர் அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோ பற்றியும் பேசியிருக்கிறார். நாட்டுல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கு. இதுல உங்க பாத்ரூம் பிரச்சினையை வச்சுக்கோங்க உங்க வீட்ல என ட்வீட் செய்திருந்தார்.

அர்ச்சனாவுக்கு இந்த ட்வீட் புதிதல்ல. ஏனென்றால், என்றைக்கு விஜே அர்ச்சனா தான் நடத்தும் யூடியூப் சேனலில் 'பாத்ரூம் டூர்' என்றொரு வீடியோவை வெளியிட்டாரோ. அன்றே அது பலரின் ட்ரோல் கன்டென்ட்டாக மாறிப்போனது. அவர், தன் வீட்டிலுள்ள பாத்ரூம்களை தன் மகளுடன் சேர்ந்து சுற்றிக்காட்டும் வீடியோவுக்கு பலவிதமான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், இந்த வீடியோவை தற்போது தான் பார்த்தாரோ என்னவோ சனம் ஷெட்டி. வழக்கம்போல் பொங்கி எழுந்து ட்வீட்டும் செய்துவிட்டார். அதற்குப் பதிலளித்த நெட்டிசன் ஒருவர், 1008 பிரச்சனை உங்க ஸ்டேட்ல நடக்குது. நீங்க எதுக்கு மா தமிழ்நாட்டுல பாலிடிக்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க. உங்க ஸ்டேட்ல பண்ணுங்க’ எனக் கூறி உள்ளார்.
இதற்குப் பதில் அளித்துள்ள சனம் தனது ட்விட்டர் பதிவில், “நீங்க டேக்ஸ் பே பண்ணுறீங்களாமா? நான் பண்றேன் இந்திய அரசுக்கு. இந்தியாவியில் எங்கே என்ன தப்பு நடந்தாலும் கேக்கலாம். இந்திய குடிமக்களின் உரிமைகளை பற்றி படியுங்கள். கர்நாடகா என்னை பெற்றெடுத்தது, தமிழ்நாடு எனக்கு உணவு வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நான் பணியாற்றி இருக்கிறேன். இந்த உலகத்திற்கு நான் நன்றி உள்ளவளாக இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். இதற்கும் பலர் விமர்சனங்களை அளித்துவர ஊரடங்கு காலம் நெட்டிசன்களுக்கு இப்படிக் கழிகிறது.
பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சனம்-அர்ச்சனா அன் கோவிற்கு இருந்த மோதல், நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தும் தொடர்கிறது. அதன் வெளிப்பாடு தான், ஓய்ந்து போன அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் விவகாரத்தை மீண்டும் தோண்டி எடுத்து பதிவு செய்ய காரணம் என்கின்றனர், சமூக வலைதளவாசிகள்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion