‛திமுக.. காங்கிரஸ்... விசிக... மதிமுக... கம்யூனிஸ்ட்... எல்லாமே ஒரே கட்சி தான்...’ காங்., எம்பி., திருநாவுக்கரசர் பிரச்சாரம்!
Trichy Urban Local Body Election 2022: ‛‛தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் திமுக கட்சி தான். கூட்டணி கட்சிகளுக்கு தலைமை தாங்கும் கட்சியாக திமுக இருக்கிறது’’
கூட்டணி பேசும்போது மட்டும்தான் நாம் வேற வேற கட்சிகள் கூட்டணி முடிந்து களத்தில் வந்தால் நாமெல்லாம் ஒரே கட்சி தான் - திருச்சியில் திருநாவுக்கரசு எம் பி பேச்சு
திருச்சி மாநகராட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் 24வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி, மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் புத்தூர் நால்ரோடு, உறையூர், குறத்தெரு உள்ளிட்ட வீதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
‛‛இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல் தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார், எம்பி, எம்எல்ஏ தேர்தல் எப்படி முக்கியமோ அதே போல் இந்த கவுன்சிலர் தேர்தலும் முக்கியம். தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் திமுக கட்சி தான். கூட்டணி கட்சிகளுக்கு தலைமை தாங்கும் கட்சியாக திமுக இருக்கிறது. திமுக சீட்டு கொடுக்கும்போது அதில் பாதி பெண்களுக்கு போய்விட்டது.
இருந்தாலும் கூட்டணி பேசும்போது மட்டும் தான் நாம் வேற வேற கட்சிகள். கூட்டணி முடிந்து களத்தில் வந்துவிட்டால் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒரே கட்சி தான். எல்லா வேட்பாளர்களும் நமக்கு ஒன்றுதான், எனவே கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெற செய்ய வேண்டும், சுயேச்சையாக நிற்பவர்களை ஆதரிக்காதீர்கள். நம்முடைய கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றால் ஏராளமான நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்,’’ என்றார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்றனர். திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளில் வீதி வீதியாக சென்று திருநாவுக்கரசர், திறந்தவெளி வேனில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஏற்கனவே திருச்சியில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. அந்த வகையில் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் திருநாவுக்கரசர் சூறவாளி பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதே போல் திமுக வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றொரு புறம் அதிமுகவினரும் கடந்த முறை இழந்த திருச்சியை, உள்ளாட்சி தேர்தலில் தக்க வைக்க மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் திருச்சி உள்ளாட்சி தேர்தல் கலைகட்டியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்