மேலும் அறிய

TN Local Body Election: முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

 இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் 7 முனைப்போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து  வருகின்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7 மணிக்கு தொடங்கியுள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 9 மாவட்டத்தில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.  மேலும், 9 மாவட்டங்களிலும் உள்ள 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில் 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் ஒன்றியங்களுக்கு சுற்றுப்பகுதியில் 5 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டது.

7 முனைப்போட்டி

 இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் 7 முனைப்போட்டி நிலவுகிறது. பாட்டாள் மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

7,721 மையங்களில் 41, 93,996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு? 

செங்கல்பட்டு: இலத்தூர், செயின்ட்தாமஸ் மவுன்ட், திருக்கழுகுன்றம், திருப்போரூர். 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்.

விழுப்புரம்: செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவண்டி.

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை.

வேலூர்: குடியாத்தம், கீ.வ.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு.

ராணிப்பேட்டை: ஆற்காடு, திமிரி, வாலாஜா.

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர். 

நெல்லை: அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி.

தென்காசி: ஆலங்குளம், கடையம், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget